வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு! -இளந்தமிழர் இயக்கம் வேண்டுகோள்!

Saturday, December 19, 2009

கனடாவில் நடைபெற உள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என இளந்தமிழர் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


’’கனடாவில் நாளை (19 டிசம்பர்2009) நடைபெற உள்ள ’வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்’ மீதான வாக்கெடுப்பு வெற்றியடைய எமது வாழ்த்துகள். தமிழீழ அரசியல் வரலாற்றில் வட்டுக்கோட்டைத் தீர்மானம், ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது. ‘தனித் தமிழீழமே தீர்வு’ என்ற தமிழரின் கொள்கையை உலகறியச் செய்த தீர்மானம் அது.


தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடுவதற்கான அடித்தளம், தமிழீழ மக்களின் விடுதலை வேட்கை ஆகும். தமிழீழ மக்கள், விடுதலை வேட்கைகொண்டோர் என்பதை வட்டுகோட்டைத் தீர்மானமே அரசியல் ஜனநாயக அடிப்படையில் மெய்ப்பித்தது.


இன்று, புலம் பெயர் தமிழர்கள் கைகளில்தான், ‘தமிழீழத் தாயக மீட்புப் போராட்டத்தின்’ பெரும்பங்கு உள்ளது. வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு 100 விழுக்காடு வெற்றிபெறுவதன் வழி, தமிழீழத் தேசத்தவர் இந்த உலகிற்குக் கூறும் சேதி ஒன்று உண்டு;


‘எவ்வளவு ஒடுக்குமுறைகள் எம்மீது ஏவப்பட்டாலும், எம் நிலம் வந்தேறிகளால் கூறுபோடப்பட்டாலும் எம் தேசத்தை நாங்கள் மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கையும் தெளிவும் எமக்கு உண்டு. இத்தீர்மானத்தைச் சீர்குலைக்கத் துடிக்கும் துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை’- என்பதே அச்சேதி.


’திம்புக் கோட்பாட்டை முன்வைக்க வேண்டும்’ என்ற சீரழிவுக் குரல்களும் இந்த நேரத்தில் கேட்கத்தான் செய்கிறன்றன. திம்புக் கோட்பாடு என்பது தமிழீழத் தேசத்தை இந்தியாவிடமும் சிங்களர்களிடமும் அடகு வைக்கும் தீர்மானங்களை முன்வைத்தது ஆகும். தமிழீழ விடுதலைப் போர், அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிப் பாய வேண்டிய இந்நேரத்தில் திம்பு போன்ற காட்டிக்கொடுப்பு கொள்கைகளைப் புறக்கணித்துவிட்டு, வட்டுக்கோட்டை வாக்கெடுப்பில் அனைவரும் கலந்துகொண்டு 100 விழுக்காடு வெற்றி வாக்குகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’’
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கனடாவில் மூன்று லட்சம் புலம் பெயர் தமிழர்கள் வாழ்கின்றனர். உலகிலேயே அதிக எண்ணிக்கையில் புலம்பெயர் தமிழர் வாழும் நாடு இதுவாகும். ஆகவே, கனடாவில் நடக்கும் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு, தமிழீழ மக்களின் அரசியல் தீர்மானத்தை அடையாளப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். நார்வே, பிரான்சு ஆகிய நாடுகளில் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு மிகச் சிறப்பாக நடந்துள்ளது. கனடாவிலும் இது தொடர வேண்டும் என்பதே தமிழீழ விடுதலை விரும்பிகளின் விருப்பமாக உள்ளது.

க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்

Read more...

மாவீரர் நாள் 2009

Thursday, November 26, 2009


Read more...

நடிகர் கமலஹாசனுக்கு எழுதப்பட்ட கடிதம் - இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை செய்தி

Wednesday, October 7, 2009நடிகர் கமலஹாசன் தயாரித்து, நடித்திருக்கும் ”உன்னைப் போல் ஒருவன்” திரைப்படம், இந்து மதவெறியைக் கட்டமைக்கும் இசுலாமியர் விரோதத் திரைப்படம் என குற்றம் சாட்டி இளந்தமிழர் இயக்கம் நடிகர் கமலஹாசனுக்குக் கடிதம் எழுதியிருந்தது.

இதே காரணங்களுக்காக கோவை சிறையில் உள்ள அல் உம்மா தலைவர் திரு. பாஷா அவர்களும் நடிகர் கமலஹாசனுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தை வழக்கறிஞர் இராகவன் மூலம் இளந்தமிழர் இயக்கத்திற்கு அவர் அனுப்பியிருந்தார்.

இது குறித்த செய்தி இன்று(08.10.09) 'தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்“ நாளேட்டில் வந்துள்ளது.


Life convict flays Kamal Hassan
Gokul Vannan
First Published : 08 Oct 2009 03:37:00 AM IST
Last Updated : 08 Oct 2009 09:18:32 AM IST


CHENNAI: A life convict in the Coimbatore bomb blast case, S A Basha, has come down heavily on actor Kamal Haasan for ‘justifying’ the killing of the perpetrators of violence in his latest film ‘Unnaipol Oruvan’, which shows the protagonist, played by the actor himself, taking the law into his hands.


In a letter to Kamal Haasan, a copy of which is available with Express, Basha, now undergoing sentence at the Coimbatore Central prison, has accused the actor of doing a film with a potential to affect communal harmony in the country.


“While we, the perpetrators of the Coimbatore bomb blast, have ourselves realised that violence is the not the solution for any problem and have decided to find solution through peaceful means, we are shocked to learn that an actor of your caliber has succumbed to religious hatred and is suggesting violent remedies.” Raghavan, who represented Basha in the Coimbatore bomb blast case, confirms that he has a copy of the letter, which was sent to Kamal on September 29.


In the letter, Basha referred to various communal conflicts allegedly triggered by Hindu fundamentalist groups in the country and asked Kamal if he would shoot a movie about the communal conflicts orchestrated by Hindu fundamentalists.


Basha also stated that the investigation officers of the Coimbatore blast case concluded that it had no connection with terrorism or extremism, as it was a conflict between the two communities. “Based on that, the court has also punished us, but portraying the perpetrators as those who have received training from Afghanistan only promotes communal feeling among the people. You should have had a proper discussion with us before making a film like this,’’ Basha said.


Basha has indirectly accused the actor of not having the courage to make a film on actual perpetrators of violence and making a film that supports them. Basha signed off by asking the actor to involve in activities that strengthen the secular and democratic spirit of the nation.
The Ilam Tamilar Iyakkam has also sent a letter to the actor condemning him on similar grounds. Kamal Haasan could not be contacted.

நன்றி : தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ், 08.10.09.

Read more...

நடிகர் கமலஹாசனுக்கு இளந்தமிழர் இயக்கம் கடிதம்: சிறப்பு ஆதாரங்கள் வெளியீடு

Saturday, October 3, 2009

நடிகர் கமலஹாசனுக்கு இளந்தமிழர் இயக்கம் கடிதம்:
சிறப்பு ஆதாரங்கள் இளந்தமிழர் இயக்கத்தால் வெளியீடு
சென்னை, 03.02.09.

நடிகர் கமலஹாசன் தயாரித்து, நடித்து வெளிவந்திருக்கும் ”உன்னைப் போல் ஒருவன்” படத்தில் இசுலாமியர் விரோத இந்து மதவெறிக் கருத்துகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. சிறையில் தண்டனை அனுபவிக்கும் கைதிகளையும் கூட வெளியே அழைத்து வந்து கொல்ல வேண்டும் என்ற சட்ட விரோதமான வன்முறை கருத்து, இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து, கோவை சிறையிலிருக்கும், அல்-உம்மா இயக்கத் தலைவர் பி.டி.பாஷா அவர்கள், நடிகர் கமலஹாசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவரது வழக்கறிஞர் இராகவன் மூலம் இளந்தமிழர் இயக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற அக்கடிதத்தை இளந்தமிழர் இயக்கம் இன்று வெளியிடுகின்றது. (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது).

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் தாலிபன், லஷ்கர் - இ தொய்பா போன்ற முஸ்லிம் பயங்கரவாத இயக்கங்களுக்கும், தொடர்பு உண்டு என்பது போலவும் இப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் தவறானது. கோவை குண்டு வெடிப்பு வழக்கு குறித்து காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கையில் இவ்வாறான தொடர்புகள் குறித்து எதுவும் கிடையாது.

இந்து மதவெறியர்களான ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பி.ஜே.பி. போன்ற அமைப்புகளுடன் இணைந்து கொண்டு காவல்துறையினரும் வன்முறையில் ஈடுபட்டனர் என்றும் அவர்களுக்கு மட்டுமே இதில் சம்பந்தம் உள்ளது என்றும் காவல்துறை அளித்த இறுதி அறிக்கையிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக அவ்வறிக்கையின் ஒரு பகுதியை (காவல்துறை தாக்கல் செய்த இறுதி அறிக்கையின் பக்கம் 16)நாங்கள் வெளியிடுகிறோம்.


பொய் செய்திகளை வெளியிட்டு சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இந்து மதவெறியைத் தூண்டி விடும் இப்படம் குறித்து கடும் கண்டனத்தை பதிவு செய்து நடிகர் கமலஹாசனுக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அக்கடிதத்தையும் இத்துடன் வெளியிடுகின்றோம்.

சிங்கள இனவெறி அரசின் அரச பயங்கரவாதத்தால் இரக்கமின்றி ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதற்கு எந்த கண்டனமும் தெரிவிக்காமல் வாய் மூடிக் கிடந்த இந்தியாவின் மற்ற மாநில மக்கள் குறித்து நடிகர் கமலஹாசனால் கேள்வி எழுப்புவதில்லை. ஆனால், மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தமிழகம் ஏன் மவுனமாக இருந்தது என்று மட்டும் அவரது திரைப்படத்தின் மூலம் அவர் கேட்கிறார். இதில் அவரது ஒரு தலைபட்சமான இந்தியச் சார்பு நிலை அரசியல் தான் வெளிப்படுகிறதே தவிர, மனித நேயம் வெளிப்படவில்லை.

இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் முறையான பதில் அளிக்காத பட்சத்தில் நடிகர் கமலஹாசன் மீது இளந்தமிழர் இயக்கம் சார்பில் வழக்குத் தொடரப்படும் என்றும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்,

க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.

நடிகர் கமலஹாசனின் ‘உன்னைப் போல் ஒருவன்’;
இந்து மதவெறியைக் கட்டமைக்கும் இசுலாமியர் விரோதத் திரைப்படம்
இளந்தமிழர் இயக்கம் நடிகர் கமலகாசனுக்கு எழுதிய கடிதம்


மதிப்பிற்குரிய நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு,

வணக்கம். அண்மையில் தாங்கள் தயாரித்து, நடித்திருக்கும் ‘உன்னைப் போல் ஒருவன்’ என்ற திரைப்படம் வெளியாகி தமிழகத் திரையரங்குகளில் ஓடி வருகின்றது. இத்திரைப்படம் இந்து மதவெறியைக் கட்டமைக்கும், இசுலாமியர் விரோதத் திரைப்படம் என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நால்வரையும் குண்டு வைத்துக் கொலை செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளது ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம். இது இந்திய அரசியல் சாசனத்திற்கும் இந்திய குற்றவியல் சட்டங்களுக்கும் மனித உரிமைச் சாசனங்களுக்கும் விரோதமானது ஆகும். இது ஒரு புனைவுதான் (குiஉவழைn) என்று நீங்கள் வாதிட முடியாது. ஏனெனில், இப்படத்தில் நீங்கள் குறிப்பிடும் சம்பவங்கள் அனைத்தும் உண்மைச் சம்பவங்கள். உண்மைச் சம்பவங்களை உங்கள் வசதிக்கு ஏற்ப திரித்துப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.

மேலும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வீடு, தி.மு.கவின் கொடி, முதல்வரின் குரல் ஆகியவற்றைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஆகவே ‘உன்னைப் போல் ஒருவன்’, ஒரு முழுப் புனைவு அல்ல.

இப்படத்தில் பயங்கரவாதிகள் என்பது போல் காட்டப்படும் நால்வருள், மூவர் இசுலாமியர்கள். ஒருவர் இந்து. அந்த ஒரு இந்துவும் கூட ஆயுத வணிகம் செய்து பிழைக்கின்றவரேத் தவிர அவருக்கு மதவெறி நோக்கம் எல்லாம் கிடையாது என்றும் இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக, இஸ்லாமியர்களுக்கும் மதவெறி நோக்கம் உள்ளது. ஆனால் இந்துக்களுக்கு மதவெறி இல்லை என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளீர்கள்.

2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்து மதவெறியர்களால் நடத்தப்பட்ட கலவரங்களில் தனது மனைவியை இழந்த ஒரு இசுலாமியர், 1998 ஆம் ஆண்டே அதற்காக கோவையில் குண்டு வைத்தார் என்று காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள். இது உண்மையைத் திரித்து ஒரு சமூகத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் குற்றச் செயலாகும்.

கோவை தொடர் குண்டு வெடிப்புகள் வழக்கில் சதிக் குற்றம் சுமத்தப்பட்ட கேரள மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் மதானி நாசர், குற்றம் நீரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.1993 ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 இசுலாமியர்கள், 14 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரபராதிகள் என தடா நீதிமன்றத்தாலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு இசுலாமியர்கள் பல வழக்குகளில் குற்றவாளிகள் அல்ல என்று பல நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு வந்துள்ளனர்.

ஆனால் உங்கள் திரைப்படத்தில் கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ‘ஈடுபட்டவர்கள்’ கொல்லப்பட வேண்டும் என்று கூறுகிறீர்கள். நீதிமன்றங்களே விடுதலை செய்த பிறகு அவர்களுக்கு மரண தண்டனை அளிக்க விரும்பும் நீங்கள் இஸ்லாமியர் மீதான வெறியைத் திணிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறோம்.

திரைப்படத்தில் வெளியிட்டுள்ள உங்களது விருப்பப்படி, இவர்களையெல்லாம் அன்றே விடுவித்து ‘கொலை’ செய்திருந்தால்? அவர்களது குடும்பமும், குழந்தைகளும் என்ன நிலைக்கு ஆளாகியிருப்பார்கள்? அவர்கள் எந்த முடிவை கையிலெடுத்திருப்பார்கள் என்றெல்லாம் நீங்கள் சிந்தித்திருக்கவில்லையா?

பாபர் மசூதி இந்து மதவெறியர்களால் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கலவரங்களிலும், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கலவரங்களிலும், ஒரிசா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்களிலும் முழுவதுமாக பாதிக்கப்பட்டதும், உயிர்ச்சேதம், பொருட்சேதம் உள்ளிட்ட சேதங்களை சந்தித்தது, சிறுபான்மையின மக்கள் தாம். அம்மக்களுள், பாதிக்கப்பட்ட, உணர்ச்சி வயப்பட்ட இளைஞர்கள் சிலர் செய்யும் காரியங்களை மட்டுமே ‘பயங்கரவாதம்’ என்று சித்தரிக்கும் நீங்கள், இந்தக் கலவரங்களில் ஈடுபட்டு இசுலாமியர்களையும், கிறிஸ்துவர்களையும் தாக்கிக் கொன்றழித்து, அவர்களது வாழ்விடங்களை சேதப்படுத்திய இந்து மதவெறியர்களை வெளிப்படையாக இப்படத்தில் கண்டிக்கவில்லை. இதன்வழி, இப்படம் இந்துத் தீவிரவாத உணர்வுகளைப் பரப்புகிறது என்பது எங்கள் குற்றச்சாட்டு.

2006 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலம் மலேகான் நகரில் இசுலாமியர் வாழ்ப் பகுதியில் குண்டு வெடித்து 37 பேர் இறந்தனர். இதற்குக் காரணம் என்ற சொல்லி அப்பொழுது, பல இசுலாமியர்கள் கைது செய்யப்பட்டு பல இசுலாமிய இயக்கங்கள் மீது பயங்கரவாத பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அதற்குப் பின்னர், செப்டம்பர் 29 அன்று திரும்பவும் நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 30 பேருக்கு மேல் காயமடைந்தனர். அதே நேரத்தில், குஜராத் மாநிலத்தில் மொடாசா என்ற ஊரிலும் குண்டு வெடித்தது. அதில் 16 வயது சிறுவன் கொல்லப்பட்டான். 10 பேர் காயமடைந்தனர். இவ்விரண்டு சம்பவங்களுக்கும் காரணம் சாத்வி பு+ர்ண கிரி என்ற இந்துமதவெறி சாமியார் தான் என்று அறிவித்தது காவல்துறை.

2007 சனவரி 24ஆம் தேதி, தமிழ்நாட்டில் தென்காசி நகரில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. 2 பேர் காயமடைந்தனர். இதற்குக் காரணம் இசுலாமியர்கள் தான் என்று பா.ச.க. இல.கணேசன், இந்து முன்னணி இராம.கோபாலன் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். இறுதியில், இதற்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தான் என்று காவல்துறை கண்டுபிடித்தது. “இந்துக்களிடம் எழுச்சி வர வேண்டும்” என்பதற்காக அப்படி செய்ததாகவும் அந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொன்னார்கள்.

2007 ஏப்ரல் 6 அன்று மராட்டிய மாநிலம் நாண்டட் நகரில் அதிகாலைப் பொழுதில், ஓய்வு பெற்ற நீர்பாசனத்துறைப் பொறியாளர் லக்‘;மணன் என்பவர் வீட்டில் வெடிகுண்டு வெடித்தது. 3 பேர் மாண்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். காயமடைந்தவர்களை இந்து மதவெறித் தலைவர்களான விசுவ இந்து பரிசித்

உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் போய் பார்த்து “ஆறுதல்” கூறினர். விசாரித்ததில், மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் நகரின் மசூதி ஒன்றில் குண்டு வைக்கவே அவர்கள் வெடிகுண்டுகள் தயார் செய்திருந்தது அம்பலமானது.

2008 ஆகஸ்ட மாதம் கான்பு+ரில் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போது, ராஜீவ் மிஸ்ரா, பு+பேந்திர சோப்ரா என்ற 2 ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் இறந்த சம்பவம் நடந்தது.

இவை அனைத்தும் இந்துத் தீவிரவாத அமைப்புகள் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள். உன்னைப் போல் ஒருவன் திரைப் படத்தில் நீங்கள் நடித்த கதாபாத்திரம் பல குண்டுவெடிப்புகளைச் சுட்டிக் காட்டிப் பேசுகிறது. அவை அனைத்துமே இஸ்லாமியர் செய்ததாகக் கூறப்படும் சம்பவங்கள்தான். மேலும் 1982 மீனம்பாக்கம், 1991 பெரும்புதூர் குண்டு வெடிப்புகளையும் மேற்கோள் காட்டிப் பேசியுள்ளது அக் கதாபாத்திரம்.

ஒருவேளை நாட்டில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் விமர்சிப்பது உங்கள் நோக்கம் என்றால், இந்துத் தீவிரவாத அமைப்புகள் ஈடுபட்ட பயங்கரவாதச் செயல்களை நீங்கள் உள்நோக்கத்தோடு தான் தவிர்த்திருக்கிறீர்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவர்களுக்கு ஆப்கான் தலிபான்களுடன் தொடர்பு உள்ளது என்று உங்கள் திரைப்படம் கூறுகிறது. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் நீதி மன்றம் அளித்த தீர்ப்புகளில் கூட இந்தக் குற்றச் சாட்டு கூறப்படவில்லை. ஆகவே, நீதிமன்றம், விசாரணை ஆகியவற்றைத் தாங்கள் அவமதித்திருக்கிறீர்கள்.

சிறையில் இருக்கும் கைதிகளை வெளியில் கொண்டு வந்து கொல்ல வேண்டும் என்ற கருத்தை நீங்கள் இத்திரைப்படத்தில் நியாயப்படுத்தியிருக்கிறீகள். இதன் விளைவாக, கோவை குண்டு வெடிப்பில் கைதாகிச் சிறையில் இருக்கும் இஸ்லாமியத் தோழர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் வாடுகின்றனர்.

இவர்களது அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் தாங்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டுகிறோம்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு தாங்கள் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் பதலளிக்க வேண்டும். மேலும், இந்து மதவெறியை ஆதரிக்கும் காட்சிகளையும் வசனங்களையும் உடனடியாக நீக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம்.

தோழமையுடன்,
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.

Read more...

ஈழஅகதிகளை இனப் பாகுபாட்டுடன் நடத்துகின்ற அரசுகள்: இளந்தமிழர் இயக்கம் வழக்குத் தொடுக்க முடிவு

Thursday, September 24, 2009

ஈழஅகதிகளை இனப் பாகுபாட்டுடன் நடத்துகின்ற அரசுகள்:

இளந்தமிழர் இயக்கம் வழக்குத் தொடுக்க முடிவு


தமிழ்நாட்டில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழஅகதிகளை இந்திய, தமிழக அரசுகள் இனவேறுபாட்டுடன் நடத்துகின்றன என்று குற்றம் சமத்தி இளந்தமிழர் இயக்கம் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளது. இது குறித்து ”தமிழ்நெட்.காம்” இணையதளத்தில் வந்த செய்தி:

Court case mooted against India’s internment camps for Eezham Tamils

[TamilNet, Thursday, 24 September 2009, 18:47 GMT]


Long continuing human rights violations of Government of India and Tamil Nadu State Government, by the way they treat Eezham Tamils in internment camps and refugee camps in Tamil Nadu, are challenged by I’lanthamizhar Iyakkam (Young Tamil Movement) in Chennai, which is mooting a court case in this regard. Accusing the central and state governments for showing racial discrimination against Eezham Tamil refugees, for committing repression by their police and intelligence services and for failing in equal treatment compared to Tibetan and Burmese refugees, the YTM seeks redress under Articles 14 and 21 of the Indian constitution, says a document released by K. Arunabharathi, coordinator of YTM and plaintiff of the proposed case.


For many years now, India is operating two internment camps in Chengkalpaddu and Poonthamalli in Tamil Nadu, under the nametag ‘special camps,’ for keeping select Eezham Tamils virtually as prisoners, even after their registration as refugees.


While courts elsewhere in India have released even prisoners to get registered as refugees, keeping registered Eezham Tamil refugees as prisoners, breaches basic human rights guaranteed by the constitution, says YTM document.


India is operating 117 refugee camps for Eezham Tamils in Tamil Nadu. But the camps are not observing international norms upheld by UN convention for refugees, the document says, citing the following:


While the UN refugee convention insists on equal treatment of refugees, the Eezham Tamil refugees in India are explicitly shown discrimination and are deprived of facilities and freedom granted to refugees from Tibet, Burma, Afghanistan and former East Pakistan.


The Tamil refugees are branded as terrorists and are treated as detainees.The UN convention concedes to refugees the right to choose their place of residence and to travel freely within the territory of the country granting them the refugee status. While the other refugees from Tibet and Burma enjoy these rights, only the Eezham Tamils are confined to the 117 camps in Tamil Nadu, even after recognition as refugees.


Besides, the two special camps, the existence of which is acknowledged by the government, are illegal in this respect.The UN convention guarantees the right to seek legal remedy to refugees. The Eezham Tamil refugees living in an atmosphere of fear are scared to complain. Those who wish to take up complains to courts are intimidated by the intelligence agencies and by the camp administration.The document, besides citing a number of court precedences, has annexed reports from Mr. Ravikumar MLA, human rights organisations of Tamil Nadu and Pondichery and a report from Coimbatore Law College students who had made comparative studies between the camps of Eezham Tamil and Tibetan refugees. India is not a signatory to the UN Refugee Convention of 1951 signed by 130 countries. Most of the Indian laws regarding foreigners are a continuity of repressive British colonial laws that were never revised. Only the basic human rights guaranteed by the Indian Constitution is viewed as something helpful to the refugees, legal circles said.

Read more...

ராகுல் காந்தி வருகை: .இளந்தமிழர் இயக்கம் கண்டனம்

Tuesday, September 8, 2009தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த ராகுல் காந்தி வருகை
தமிழ்ச் சமூகத்திற்கு வரலாற்று அவமானம்
இளந்தமிழர் இயக்கம் கண்டனம்


காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி கட்சியை பலப்படுத்தும் எண்ணத்தோடு தமிழ்நாடு வந்திருக்கிறார்.
ஈழத்தில் நம் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் சிங்கள அரசால் குண்டு வீசிக் கொல்லப்பட்டும், பிணைக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டும் உள்ளனர். நூற்றாண்டு காணாத வரலாற்று சோகத்தைத் தாங்கியபடியும், தங்கள் இனத்தின் ஒரு பகுதி மக்களை இழந்தும் தமிழிகம் சோகத்தில பரிதவித்து நிற்கிறது. போர் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, 3 லட்சம் மக்கள் முள்வேலிக் கம்பிகளுக்குள்ளும் மின்சார வேலிகளுக்குள்ளும் சிறைபட்டுக் கிடக்கிறார்கள். முகாமிற்குள் தமிழ் இளைஞர்கள சுட்டுக் கொல்லப்படுகின்றனர். போருக்கு உதவியது மட்டுமின்றி, அப்போர் குறித்த விசாரணைக்குக் கூட இந்திய அரசு, ஐ.நா. சபைக்கு சென்று தடை போட்டதை எந்தத் தமிழனும் மறக்க மாட்டான்.

சிங்கள அரசின் இந்த அழிவு நடவடிக்கைகள் அனைத்திற்கும் உறுதுணையாக நின்று, ஆயுதங்களும் நிதியும் வழங்கியது இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சி. இலங்கையின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காகத் தான் ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படையாகத் தெரிவித்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இணை அமைச்சர் பல்லம் ராஜூ உட்பட பலரும் இதனை உறுதிப்படுத்தினர். அண்மையில் கூட என்.டி.டி.வி. பாதுகாப்புப் பிரிவிற்கான ஆசிரியர் நிதின் ஆனந்த் கோகலே எழுதிய ‘சிறீலங்கா: போரிலிருந்து சமாதானம்”(Srilanka : From War to Peace) என்ற அவரது நூலில் இந்தியா வழங்கிய அனைத்து உதவிகளையும் பட்டியலிட்டு எழுதியுள்ளார்.

இவ்வாறு ஈழத்தமிழர்களை அழிக்க முழுமனதுடன் உதவிய காங்கிரஸ ; கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, அக்கொலைகாரக் கட்சியை தமிழகத்தில் பலப்படுத்தும் எண்ணத்தோடு தமிழகம் வந்திருப்பது, தமிழினத்திற்கு அவமானம் தரக்கூடிய செயலாகும். ராகுல் காந்திக்கு மட்டுமல்லாமல், அவரது கட்சிக்கும் தமிழ்நாட்டில் பாதுகாவலராக உள்ள தமிழக முதல்வர் கருணாநிதியையும், இந்த இனத்தின் ஒரு பகுதி மக்களை கொன்றழித்தோமே என்ற குற்றவுணர்வு சிறிதும் இன்றி, அக்கடச் pயை, தமிழ் இனத்தின் தாயகத்திலேயே பலப்படுத்த வேண்டும் என்று எண்ணுகிற காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகைக்கு வெறும் சம்பிரதாய எதிர்ப்புகள் மட்டும் போதாது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை தமிழகத்தில் முடக்கி, அக்கட்சி செயல்பட முடியாதுவாறு பல்வேறு வழிகளிலும் போராடுவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். அந்நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக இளந்தமிழர் இயக்கம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துப் பரப்பல்களையும், இயக்கங்களையும் முன்னின்று நடத்தும். காங்க்கிரஸ் கட்ச்சிக்கு எதிரான பரப்புரைகளுக்கு மையமாக இளந்தமிழர் இயக்கம் நடத்த்தி வரும் www.defeatcongress.com இணையதளம், இனி புதிய வீரீரீரியத்து;துடன் செயல்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று தந்தைப் பெரியார் கூறினார். அவரது நோக்கங்களை அவரது பேரன்களாகிய நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று
உறுதி கூறுகிறோம்.

தோழமையுடன்,
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்.

Read more...

தொடர்வண்டி நிலையத்தில் இந்திக்காரர்கள் அட்டூழியம் - ஊடகச் செய்திகள்

Monday, September 7, 2009

மாலை முரசு, 07.09.09
தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ், 07.09.09


மத்திய அரசின் இந்தித் திணிப்பு-
இளந்தமிழர் இயக்கம் கண்டனம்
தட்ஸ்தமிழ் இணையம் செய்தி
http://thatstamil.oneindia.in/news/2009/09/07/tn-ilantamilar-iykkam-condemns-centres-attitude.htmlதமிழில் விண்ணப்பம் அளித்த பெ‌ண்‌ ‌மீது தா‌க்‌குத‌ல்:
இளந்தமிழர் இயக்கத்தினர் இர‌யி‌ல் ‌நிலைய‌‌ம் மு‌ற்றுகை‌
தமிழ் வெப்துனியா செய்தி


தமிழில் விண்ணப்பம் அளித்த பெண்ணைத் தாக்க
இந்தி ஊழியர்கள் முயற்சி!
தமிழ்ச்செய்தி இணையம்
http://www.tamilseythi.com/tamilnaadu/1417.html

Read more...

இளந்தமிழர் இயக்கத்தினர் திடீர் முற்றுகை

Sunday, September 6, 2009

தமிழில் விண்ணப்பம் அளித்த பெண்ணைத் தாக்க
இந்தி ஊழியர்கள் முயற்சி
இளந்தமிழர் இயக்கத்தினர் திடீர் முற்றுகை
சென்னை, 05.09.09.

மயிலாப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் கடந்த 25.08.09 அன்று மயிலாப்பு+ரை சேர்ந்த திருமதி. இலட்சுமி என்பவர் தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு நிலையத்தில் தமிழில் முன்பதிவுச் சீட்டு பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். அவ்விண்ணப்பத்தை அங்கிருந்த வடநாட்டைச் சேர்ந்த கிN‘hர்குமார் என்ற ஊழியர் அவ்விண்ணப்பம் தமிழில் இருப்பதைக் கண்டு, அவ்விண்ணப்பத்தை தூக்கி விசிறியெறிந்துள்ளார். இதனால் திருமதி. இலட்சுமி அவமானம் அடைந்தார். திருமதி. இலட்சுமி மற்றும் அவரது கணவர் திரு.மூர்த்தி ஆகியோர் மயிலாப்பூர் தொடர்வண்டி நிலைய முன்பதிவு மேற்பார்வை அலுவலர் திரு. இளங்கோவன் அவர்களிடம் முறையிட்டு புகார் செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த இந்தி ஊழியர்கள் 4 பேர் சேர்ந்து கொண்டு இனவெறியுடன் திருமதி.இலட்சுமியையும் அவரது கணவரையும் தாக்க முயன்றுள்ளனர்.
இதனை அங்கிருந்த மேலாளரும் கண்டித்துள்ளார். (இது குறித்த செய்தி ‘தினகரன்’ நாளிதழில் 26.08.09 அன்று வெளிவந் துள்ளது.)இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி தலைமையில் இளந்தமிழர் இயக்கத் தோழர்கள் இன்று(05.09.09) பகல் 12 மணியளவில் மயிலாப்பு+ர் தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு நிலையத்திற்கு சென்றனர்.
அங்கிருந்த மேற்பார்வையாளர; அலுவலகத்தைத் திடீர் முற்றுகையிட்டு; நடந்த நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திருமதி.இலட்சுமியின் புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கேட்டனர். ஆனால், நிர்வாகத் தரப்பு இன வெறியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
மயிலாப்பூரில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்நாட்டின் தேசிய மொழியான தமிழ் மொழி அறியாத வடமாநிலத்தவர்களும், மலையாளிகளும் பெரும் எண்ணிக்கையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்திய அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டில் இவ்வாறு வேற்று இனத்தவரை பணியில் அமர்த்தி தமிழ் இனத்தின் தாயகமான தமிழ்நாட்டை, கலப்பினத்தவர்கள் வாழும் மாநிலமாக மாற்றும் செயல்திட்டத்தை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. கடந்த வாரம் சென்னையில் நடத்தப்பட்ட நடுவண் அறிவியல் மற்றும் தொழில்துறை தொடர்பான ஆராய்ச்சி(சி.எஸ்.ஆர்.) நிறுவனத்திற்கான தேர்வில் 20 கட்டாய இந்தி வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு மாணவர்கள் இக்கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாதால்;, பணிக்கும் தேர்வு பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான, இந்திய அரசின் தொடர்ச்சியான இந்தித் திணிப்புப் போக்கை இளந்தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

1956-இல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களைத் தகர்க்கும் விதமாக வேற்று மாநிலத்தவரை தமிழ்நாட்டில் வேண்டுமென்றேக் குடியேற்றம் செய்கிறது இந்திய அரசு. தமிழகத்தில் செயல்பட்டு வரும் நடுவண் அரசு அலுவலகங்களின் பணியிடங்களை, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புத் துறை அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும்.
இக்கோரிக்கையை முன்வைத்தும், திருமதி. இலட்சுமி அவர்களின் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளையும், தமிழ் உணர்வாளர்களையும் திரட்டி போராட்டங்கள் நடத்துவோம் என்று எச்சரிக்கிறோம்.

தோழமையுடன்,
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.

Read more...

இளந்தமிழர் இயக்கம் அவசர வேண்டுகோள்!

Wednesday, July 22, 2009


செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அகதிகள் காலவரையற்ற உண்ணாநிலை
தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்

நாள் : 23..07.09

சென்னை செங்கல்பட்டில் ஈழ அகதிகளுக்கான சிறப்பு முகாம் ஒன்று உள்ளது. 1993 ஆம் ஆண்டு இம்முகாம் தொடங்கப்பட்டது. தமிழீழ மக்களுக்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களும் மருந்துகளும் அனுப்ப முயன்றாதாக “குற்றம்”சாட்டப்பட்டவர்கள் உட்பட சுமார் 85 பேர் இம்முகாமில் தற்பொழுது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள வதை முகாம் இது என்றும், சிங்களர்களை விட இங்குள்ள தமிழ்நாட்டு அரசு தங்களைக் கொடுமையாக நடத்துவதாகவும் முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் வேதனையுடன் கவலைத் தெரிவித்து இது குறித்து நமக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

பிணையில் சிறையிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கூட, தமிழக அரசு சிறையிலிருந்;து வெளிவந்தவர்களை வெளியில் விடாமல் தனி முகாமிட்டு மீண்டும் மறைமுகமாக சிறைப்படுத்தி இம்முகாமில் வைத்திருக்கிறது. இவர்களில் பலருக்கு வழக்கு முடிந்து விட்ட போதும் முகாம் அதிகாரிகள் அவர்களை வெளியில் விடாமல் சட்டத்திற்கு புறம்பான வகையில் அவர்கைள சிறைப்படுத்தி வைத்துள்ளனர். வழக்கு முடியாதவர்கள் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவ்வழக்கை தனியாக நடத்தவும், அதற்கான ஒத்துழைப்பை அரசிற்கு நிச்சயம் அளிப்போம் என்றும் உத்திரவாதமும் தருகின்றனர்.

மேலும், அம்முகாமில் உள்ள பலர் தங்கள் உறவுகளை அண்மையில் நடந்த ஈழப்போரின் போது இழந்துள்ளனர். அதில் பாதிக்கப்பட்டு பலர் மனநோயாளிகளாகவும் மாறிவிட்டனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்ன்றன. தற்பொழுது நோயாளிகளாக உள்ளவர்களைத் தவிர மிதம் உள்ள 60 பேர் தங்களை விடுவிக்கக் கோரி முகாமிற்குள்ளேயே நேற்று(22.07.09) காலையிலிருந்து காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஞாயமான அவர்களது இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று(22.07.09) மாலை சென்னை சைதாப்பேட்டையில் தமிழர் ஒருங்கிணைப்பு சார்பில் நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் த.செ.மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, பத்திரிக்கையாளர் திரு. அய்யநாதன் உள்ளிட்டோர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு தீர்மானத்தை வழிமொழிந்துள்ளனர்.

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு உரிமைகளை மீட்டுத் தருவோம் என்று உறுதி கூறும் தமிழக அரசு, அவ்வுரிமைகளை முதலில் தனது அரசின் கீழ் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு அளிக்க வேண்டும். எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அகதிகளை முகாமிலிருந்து விடுவிக்க வேண்டும் என இளந்தமிழர் இயக்கம் சாhபில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், முகாமிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்குத் தகுந்த வாழ்வாதாரங்களையும் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இடம் : சென்னை -17.

தோழமையுடன்,
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.

Read more...

அறிக்கைகளின் அரசியல்: இணையதளங்களுக்கு இளந்தமிழர் இயக்கத்தின் அவசர வேண்டுகோள்!

Wednesday, July 15, 2009


அறிக்கைகளின் அரசியல்: இணையதளங்களுக்கு இளந்தமிழர் இயக்கத்தின் அவசர வேண்டுகோள்!

இன அழிப்பு உச்சத்தை எட்டிய 19/5 க்குப் பிறகு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப் பற்றியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும் உலகத்தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உலா வருகின்றன.

பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன.

மேலும், இயக்கத்தில் உள்ளதாக சொல்லப்படும் சில தலைவர்களின் அறிக்கைகள், “போராளிகள்” என அடையாளப்படுத்தப்படும் சிலரது கட்டுரைகள் சிங்கள அரசின் உளவுத்துறைக்கு நேரடியாகவே துணைபோவதாக நாம் கணிக்கிறோம். ஏற்கெனவே இது, இந்திய “றோ” உளவுத்துறையின் சதியாக இருக்கலாம் என்ற செய்தி “அதிர்வு”, “நெருடல்” இணையதளங்களால் எழுப்பப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

ஆயுதப் போராட்டம் நடத்தியது தவறு என்று சொல்வதும், இயக்கத்தின் கடந்த காலத் தவறுகள் குறித்து பட்டியலிடுவதுமாக சில கட்டுரைகள் கூட வெளிப்பட்டன. இயக்கத்திற்குள் நடைபெற வேண்டிய விவாதங்கள் பொது விவாதங்களாக்கப்பட்டுள்ளன. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், நெருடல் இணையதளத்தில் வெளியான “இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற” என்ற கட்டுரை. இயக்கத்தின் மீது சேறடிக்கும் விமர்சனங்களை எழுப்பும் அக்கட்டுரை பொது விவாதத்தளத்திற்கு விடப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. அக்கட்டுரையில்,

· தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டிருந்தது,

· புலிகள் இயக்கத்தின் சகல மட்டங்களிலும் சிங்கள உளவுப்பிரிவினர் ஊடுருவியிருந்தனர்,

· சமாதானக் காலத்தில் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் வழி சொகுசு வாழ்க்கைப் பழக்கப்படுத்தப்பட்டது,

· இயக்கத்திற்குள் சிங்கள இராணுவம் ஊடுருவல்,

· கட்டாய ஆள் சேர்ப்பு உள்ளிட்ட எண்ணற்ற விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவை குறித்து நேரடியாக எந்தக் கருத்தையும் வெளியிடுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தவிர வேறு யாருக்கும் உரிமையிருக்க முடியாது.

ஏனெனில் இவை அனைத்தும் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்த உள்ளரங்கத் திறனாய்வுச் செய்திகள். இவை உண்மையா பொய்யா என்பதல்ல எமது அக்கறை. தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்து எதிர் முகாம் மேற்கொள்ளும் வழமையான அவதூறு பரப்பலின் அனைத்து அம்சங்களும் இந்த ஒரேக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். எழுதியவர் நோக்கத்தைக் குறித்து நாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே வேளை, இக்கட்டுரை ஏற்படுத்தும் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இன்று சந்தித்திருக்கும் பின்னடைவு அவ்வியக்கம் கடந்த காலத்தில் செய்த தவறுகளின் விளைவு என்று பரவலாக பரப்புரை செய்யப்படுகின்றது. இப்படி செய்பவர்கள் அனைவரும் ஈழத்தில் இன அழிப்பு நடந்ததையோ இன்றும் முகாம்களில் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழர்களின் வாழ்வை குறித்தோ அநியாயமாக திருப்பி அனுப்பப்பட்ட “வணங்காமண்” கப்பல் குறித்தோ எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்காதவர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் இலங்கையிலும் தமிழகத்திலும் அரசதிகாரத்தின் ஒட்டுக் குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்த செய்திகள். இந்நிலையில் இயக்கத்தின் மீது போகிற போக்கில் விமர்சனங்களை வீசும் மேற்கண்ட கட்டுரை இயக்கத்தின் ஆதரவு முகாமிலிருந்தே வெளியிடப்பட்டிருப்பது ஒட்டுக் குழுக்களுக்கு ஊட்டமளிக்கும் செயலாக அமைந்து விடும்.

ஏசியன் ட்ரைபியுன்” இணையதளம் நேற்று(22.06.09), தலைவர் பிரபாகரனை படுகொலை செய்தது பொட்டு அம்மானாகவே இருக்க முடியும் என்ற பொருளில் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக புலிகளின் புலனாய்வுப் பிரிவு செயல்பட்டது என்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இச்செய்தியை சிங்கள இராணுவம் வெளியிட்டதாக “ஏசியன் ட்ரைபியுன்” குறிப்பிட்டுள்ளது. இந்தக் கட்டுரை தமிழகத்தில் தினத்தந்தி நாளிதழில் விரிவாகவே வெளியிடப்பட்டுள்ளது. ஆக, பொட்டு அம்மான் மீதும் புலிகளின் புலனாய்வுப்பிரிவின் மீதும் தமிழர்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டதை நாம் உணர முடிகின்றது.

இந்தப் பின்னணியில் நெருடல் இணையதளம் வெளியிட்ட கட்டுரை தெரிந்தோ தெரியாமலோ சிங்கள உளவுத்துறையின் சதியின் ஒரு பகுதியாக மாறும் ஆபத்திருக்கிறது.

இது போன்ற சூழல்களை தவிர்ப்பது போராடும் இனத்திற்கு தேவையான அடிப்படை ஒழுங்கு என்று நாம் கருதுகிறோம். எந்த இயக்கமும், தலைமையும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது அல்ல. ஆனால், விமர்சனம் செய்யப்படுவதற்கென்று களமும் காலமும் இருக்கின்றது. இணையதளங்கள் அதற்கான களமல்ல. இது அதற்கான காலமும் அல்ல. இதை ஒரு தீவிர சிக்கலாகவே கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழர் இணையதளங்கள் செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறோம்.

தோழமையுடன்,
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்

Read more...

இளங்கோவன் வீடு முற்றுகை: இளந்தமிழர் இயக்கத்தினர் பிணையில் விடுதலை

Thursday, May 21, 2009

இளங்கோவன் வீடு முற்றுகை:

இளந்தமிழர் இயக்கத்தினர் பிணையில் விடுதலை
21.05.09, ஈரோடு.

தந்தை பெரியார அவமதித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது வீட்டை முற்றுகையிட்டு 5.5.09 அன்று ஈரோட்டில் இளந்தமிழர் இயக்கம் போராட்டம் நடத்தியது. ஈரோடு பன்னீர் செல்வம் புங்காவில் தொடங்கவிருந்த முற்றுகை ஊர்வலம் புறப்படும் முன்பாகவே திடீரென இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, நிர்வாகக் குழு உறுப்பினர் ம.செந்தமிழன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஈரோடு மாவட்டச் செயலாளர் வெ.இளங்கோவன் உட்பட முன்னணி தோழர்கள் 10 பேரை காவல்துறை முதலில் கைது செய்தனர். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என்று அனுமதி மறுத்தது காவல்துறை. பின்னர் வெவ்வேறு அணிகளாக போராட்டத்தைத் தொடர்ந்த சமர்ப்பா குமரன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் செல்வராசு, தாயம்மாள், பரமேசுவரன் உள்ளிட்ட 36 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது எண்ணிக்கையை குறைவாக காட்ட வேண்டும் என்ற நோக்கில் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த பலரை அச்சுறுத்தி கைது செய்யாமல் விரட்டி விட்டனர். கைது செய்யப்பட்டத் தோழர்கள் 3 இடங்களில் தனித்தனியாக சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடைசி அணியாக கைது செய்யப்பட்ட 18 பேரை விடுவித்துவிட்டு மிதம் உள்ள 28 பேர் மீது ஐ.பி.சி. 143, 153, 188 IPC R/W 7(1)a
CLA Act, 12 of Press and Registration of Books Act 1867, 3-A of Tamilnadu Open Places Prevention of Disfigurement) act 1959 உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அன்றிரவே கோவை நடுவண் சிறையில் அடைத்தது காவல்துறை. மேலும் இப்போராட்டம் காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு துணை இராணுவம் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்று இளந்தமிழர் இயக்கம் நடத்தி வரும் பிரச்சாரத்தை மனதில் வைத்துக் கொண்டே இயக்கத்தின் முன்னணித் தோழர்களை காங்கிரஸ் - திமுக அரசு கைது செய்தது. இந்நிலையில் 11.05.09 அன்று கைது செய்யப்பட்ட
தோழர்களை பிணையில் விடுதலை செய்யக் கோரி ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ப.பா.மோகன் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 15.05.09 அன்று கைது செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒருநபர் ஜாமீன் நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நீதிமன்றத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டது.

தோழர்களை பிணையில் விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினர் நீதிபதிகளுக்கு தந்திகள் கொடுத்தும், பிணைதாரர்கள் மீது சந்தேகங்கள் எழுப்பி நாட்களை இழுத்தடிப்பதுமாக செயல்பட்டுக் கொண்டிருந்த போதும், இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் நீதிபதி பிணை வழங்கினார். பிணை உத்தரவு சிறைக்கு செல்லும் முன்பாகவே சிறையிலிருந்த ஈரோடு தோழர்கள் பலரது வீட்டிற்குச் சென்று வீட்டிலிருந்த பெண்களை மிரட்டி அச்சுறுத்தும் அடாவடித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது காவல்துறை.
இந்நிலையில் 19.05.09 அன்று பிணை உத்தரவு சிறையை வந்தடைந்தும் உள்நோக்கத்துடன், தாமதமாக அன்றைய தினம் மாலை இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உட்பட 12 பேரும், 20.05.09 அன்று மாலை இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ம.செந்தமிழன் உட்பட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தந்தைப் பெரியாரை அவமதித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கு பதிவது என்றும், கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட தோழர்களை நிர்வாண சோதனைக்கு உட்படுத்தியதற்காகவும், பிணை வந்தும் இழுத்தடித்து விதிகளுக்கு புறம்பாக தாமதமாக தோழர்களை விடுதலை செய்த கோவை நடுவண் சிறை அதிகாரிகளுக்கு வழக்குரைஞர் தாக்கீது அனுப்புவதென்றும் இளந்தமிழர் இயக்கம் முடிவு செய்துள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மன்னிப்புக் கேட்கும் வரை வெவ்வேறு வடிவங்களில் போராட்டத்தை தொடர்வதென்றும் இளந்தமிழர் இயக்கம் முடிவெடுத்துள்ளது.

சிறை சென்றத் தோழர்கள் பட்டியல்

1. க.அருணபாரதி (ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழர் இயக்கம்),
2. ம.செந்தமிழன் (நிர்வாகக் குழு உறுப்பினர், இளந்தமிழர் இயக்கம்),
3. வெ.இளங்கோவன் (மாவட்டச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி),
4. எல்.எம்.செல்வராசு (மக்கள் சிவில் உரிமைக் கழகம்),
5. டி.கார்த்திகேயன்,
6. வி.கோபி,
7. டி.யுவராஜ்,
8. ஆர்.ரமேசுகுமார் (வழக்குரைஞர்),
9. ஜி.கே.ஈஸ்வரன் (வழக்குரைஞர்),
10. எம்.எஸ்.செயக்குமார்,
11. சமர்ப்பா குமரன்,
12. அன்பழகன்,
13. மதுபாரதி,
14. கலைமதி,
15, சந்திரன்,
16. பரமேஸ்வரன்,
17. எஸ்.கே.எம்.தாஜூதீன்,
18. மொய்தீன்,
19. எஸ்.லோகநாதன்,
20. பாபு,
21. பழனிச்சாமி,
22. எஸ்.புபதி,
23. ஆர்.தமிழ்,
24. செந்தில்குமார்,
25. மூர்த்தி,
26. அப்புசாமி,
27. கருப்பன்,
28. தாயம்மாள்.

Read more...

இளங்கோவன் மீது நடவடிக்கை : முதல்வருக்கு தந்தி/பேக்ஸ் அனுப்புங்கள்

Friday, May 8, 2009

இளங்கோவன் மீது நடவடிக்கை :

முதல்வருக்கு தந்தி/பேக்ஸ் அனுப்புங்கள்
இளந்தமிழர் இயக்கம் வேண்டுகோள்ஈரோடு, 8.05.09.

தந்தை பெரியாரை இழிவாக பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சுக்காக அவர் மீது தமிழக முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வருக்கு தந்தி/பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்ப வேண்டும் என உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இளந்தமிழர் இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.

முதல்வருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்து. அதே போன்ற மாதிரிக் கடிதத்தை கீழே இணைத்துள்ளோம்.உணர்வுள்ள தமிழர்கள் மின்னஞ்சல்/பேக்ஸ்/தந்தி என முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இளங்கோவன் மீது புகார் தெரிவிக்கவும்.

முதல்வரின் பேக்ஸ் எண் : 044-25676929

முகவரி : Chief Minister's Special Cell, Secretariat, Chennai 600 009.

மின்னஞ்சல் : cmcell@tn.gov.in

தோழமையுடன்,
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.Read more...

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடு முற்றுகை : உணர்வாளர்களே ஈரோட்டில் திரள்க!

ஈரோடு, 8.5.09.

தந்தை பெரியாரின் உண்மையான பேரன் நான் தாம் என்றும் சீமான், பெரியார் சிறு வயதில் செய்த தவறுகளால் பிறந்திருக்கலாம் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசிய திமிர்த்தனமான பேச்சு உலகெங்கும் வாழும் தமிழர்கள் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் 48 மணி நேரத்தில் இப்பேச்சுக்காக இளங்கோவன் மன்னி்ப்புக் கேட்க வேண்டும் என்று இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு விடுத்திருந்தது.இக்கெடு இன்றிரவுடன் முடிவடைவதால், நாளை காலை 10 மணியளவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த இளந்தமிழர் இயக்கம் அறிவிக்கிறது.

நாளை நடைபெறவிருக்கும் இப்போராட்டத்தில் உணர்வாளர்களும், ஊடக நண்பர்களும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு அனைவரயும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.


(குறிப்பு : ஈரோடு போராட்டத்தில் கலந்து கொள்ள விழையும் அன்பர்கள் 9626130176 என்ற கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்.)

Read more...

இளங்காவன் வீடு முற்றுகை போராட்டம் அறிவிப்பு : இயக்கத்தினர் இருப்பிடங்களில் காவல்துறை திடீர் சோதனை

Wednesday, May 6, 2009

இளங்காவன் வீடு முற்றுகை போராட்டம் அறிவிப்பு
இயக்க நிர்வாகிகள் தங்கியிருந்த அறையில் காவல்துறை சோதனை
இளந்தமிழர் இயக்கம் கண்டனம்


ஈரோடு, 7.05.09.

ஈரோட்டில் நேற்று முன்தினம்(4.05.09) திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் ”காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்” என்று வேண்டுகோளுடன் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய இயக்குநர் சீமான் ”நான் பெரியாரின் கொள்கை வழிப் பேரன்” என்று பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக 5.05.09 அன்று ஈரோடு பன்னீர் செல்வம் புங்கா அருகில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தாம் தான் பெரியாரின் அதிகாரப்புர்வமான பேரன். பெரியார் சிறு வயதில் தவறு செய்த போது வேண்டுமானால் சீமான் பிறந்திருக்கலாம் என்ற பொருளில் பெரியாரை மிகவும் கீழ்த்தரமாக அவர் ஒழுக்கக் கேடானவர் என கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். பெரியாரின் அரசியல் எதிரிகள் கூட பயன்படுத்தாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருக்கும் இளங்கோவனின் இப்பேச்சுக்கு இளந்தமிழர் இயக்கம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றது.

இதனையொட்டி, நேற்று மாலை ஈரோட்டில் ஒரு தனியார் விடுதியில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இன்னும் 48 மணி நேரத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மன்னிப்புக் கேட்காவிட்டால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்று இளந்தமிழர் இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, நிர்வாகக் குழு உறுப்பினர் ம.செந்தமிழன் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.

ஈழ விடுதலையையும், ஈழத்தமிழர் ஆதரவு தலைவர்களையும் கொச்சைப் படுத்தி பேசுவதை மட்டுமே பிழைப்பாக கொண்டு செயல்பட்டு வந்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தற்பொழுது, உலகத் தமிழர்களின் தந்தையான பெரியாரை ஈரோடு மன்னிலேயே கொச்சைப் படுத்தி பேசியியிருக்கிறார். இச்செயலை உலகத் தமிழர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும். இளங்கோவனின் வீடு முற்றுகையிடும் போராட்டத்திற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆதரவு நல்க வேண்டும். தந்தை பெரியார் குறித்து இளங்கோவன் பேசிய அவதூறான கருத்துகளை தமிழக ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கின்றன. கலைஞர் கருணாநிதியின் மறைமுக உத்தரவின் பேரில் இந்தக் கருத்தியல் ஒடுக்குமுறை நடைபெறுகின்றது. எனவு, உலகெங்கும் வாழும் தமிழர்கள் இச்செய்தியை பரவலாக எடுத்துச் சென்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் திமுக விற்கு எதிரான பரப்புரைகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று இளந்தமிழர் இயக்கம் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றது.

பெரியாரின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தி முதலாளியாக இன்று வளர்ந்து, காங்கிரசுக்கு வாக்குப் பிச்சை கேட்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எந்த முகத்துடன் இனி வாக்கு கேட்டு வருவார்? இதற்கு அவர் என்ன பதில் வைத்திருக்கிறார் என்று தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு மேலாவது காங்கிரசுக்கு ஆதரவாக வாக்குக் கேட்பதை திராவிடர் கழகம் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் திராவிடர் கழக வரலாற்றில் அழிக்க முடியாத கறை படியும் என்று இளந்தமிழர் இயக்கம் எச்சரிக்கிறது.

தமிழக நெசவாளர் அவல நிலை குறித்த ஆய்வறிக்கை வெளியீடு

தமிழகத்தில் காஞ்சிபுரம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நெசவாளர்களின் வாழ்நிலை குறித்து இளந்தமிழர் இயக்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை இச் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது. செய்தியாளர்களுக்கும் அவ்வறிக்கை வழங்கப்பட்டது. பல பகுதிகளில் நெசவாளர்கள் தமது சிறுநீரகத்தை விற்பனை செய்து வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலையை நேரில் கண்டது எமது குழு. ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இவர்களுக்காக செய்தது என்ன என்ற கேள்வியை எழுப்பும் வகையில் ஒரு தோ்தல் பிரச்சாரத் துண்டறிக்கையும் வெளியிடப்பட்டது. இத்துண்டறிக்கை பல்லாயிரக்கணக்கில் அச்சடிக்கப்பட்டு ஈரோடு உள்ளிட்ட நெசவாளர்கள் வசிக்கும் பகுதிகளில் விநியோகிக்கப்படும்.

காங்கிரசை வீழ்த்துவோம் - இணையதளம் தொடக்கம்

இச் செய்தியாளர் சந்திப்பில், ”காங்கிரசை வீழ்த்துவோம்” - ”டெபிட் காங்கிரஸ்” - www.defeatcongress.com என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டது. இந்த இணையதளத்தில் ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய சிங்கள அரசுக்கு காங்கிரஸ் உதவியதற்கான ஆதாரங்கள், காங்கிரஸ் கட்சியினர் வரலாறு நெடுக தமிழினத்திற்கு செய்து வந்த துரோககங்கள், பெரியார், அம்பேத்கர், காந்தி உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரசுக்கு எதிராக பேசிய பேச்சுகள், எழுத்துகள், காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வன்முறை வெறியாட்டங்கள், ஊழல் நடவடிக்கைகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் பற்றிய செய்தி ஆதாரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் இந்தத் தளத்திற்கு ஆதரவு அளித்து தகவல்கள் அளித்தும், இந்தத் தளத்தை பற்றிய செய்தியை வெளியிட்டும், இணையதளங்களில் இந்தத் தளத்தின் இணைப்பை இணைக்குமாறும் இளந்தமிழர் இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

”எங்கள் குடும்பத்தில் யாரும் காங்கிரசு கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம்” - ஸ்டிக்கர்கள் வெளியீடு

”எங்கள் குடும்பத்தில் யாரும் காங்கிரசுக்கு வாக்களி்க்க மாட்டோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் இச்செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுக்க இளந்தமிழர் இயக்கம் இந்த ஸ்டிக்கர்களை ஆயிரக்கணக்கில் அச்சடித்து விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. உணர்வுள்ள தமிழர்கள் இந்த ஸ்டிக்கர்களை அவரவர் பகுதிகளில் படியெடுத்து கொடுத்து காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்று இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

இயக்க நிர்வாகிகள் தங்கியிருந்த அறை நள்ளிரவில் திடீர் சோதனை

இச்செய்தியாளர் சந்திப்புக்குப் பின் அச்சந்திப்பு நடந்த தனியார் விடுதியில், இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, நிர்வாகக் குழு உறுப்பினர் ம.செந்தமிழன் ஆகியோர் தங்கியிருந்த அறையை நள்ளிரவில் காவல்துறை திடீரென சோதனையிட்டனர். சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்றாலும், போராட்ட அறிவிப்பு வெளிப்பட்ட பின், நள்ளிரவு நேரத்தில் காவல்துறை நடத்திய இச்சோதனை பல சந்தேகங்களை எழுப்புகின்றது. இன்று(7.05.09) தஞ்சாவுரில் தோழர்கள் க.அருணபாரதி, ம.செந்தமிழன் ஆகியோரை தேடுவதாகக் கூறிக் கொண்டு இளந்தமிழர் இயக்க ஆதாரவாளர்களிடையே விசாரித்து வருகின்றனர். இளந்தமிழர் இயக்கம் வெளியிட்ட தீர்ப்பு எழுதுங்கள் எனும் குறுந்தகடுகளை பெருந்தொகையில் கைபற்றிவிட வேண்டும் என்று காவல்துறையினர் மும்முரம் காட்டுகின்றனர். நேற்று இரவு சம்பவத்தோடு சேர்த்து இதுவரை இளந்தமிழர் இயக்கம் தொடர்புடையை இடங்களில் இதுவரை 3 முறைகள் காவல்துறை சோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. திமுக - காங்கிரஸ் கொலைவெறிக் கூட்டணிக்கு எதிரான பரப்புரை பணிகளை முடக்கிவிட முயலும் திமுக - காங்கிரஸ் கொலைவெறிக் கூட்டணியினரின் முயற்சிகள் வெற்றியடையப் போவதில்லை என்பது உறுதி.

Read more...

பரப்புரை துண்டறிக்கைகள் : உணர்வாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்

Thursday, April 30, 2009

ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு ஆயுத, ஆள், பண உதவிகளை செய்த இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சியை தமிழகத்திலிருந்தே விரட்டும் நோக்கில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு உணர்வுள்ளத் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்று இளந்தமிழர் இயக்கம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகி்ன்றது.


எமது இயக்கத் தோழர்களுக்கு காங்கிரஸ் குண்டர்களும், காவல்துறையினரும் ஏற்படுத்தி வரும் தடைகளைக் கடந்து நடந்து வரும் பிரச்சாரத்தின் போது கொடுக்கப்பட்டு வரும் துண்டறிக்கைகள் இப்பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. இத்துண்டறிக்கையை தமிழ் உணர்வாளர்கள் அவரவர் பகுதியில் நகலெடுத்தோ, அச்சிட்டோ கொடுத்து தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டுகிறோம். இத்துண்டறிக்கைகளை பெருமளவில் அச்சிட்டுக் கொடுத்து உதவ எண்ணமுள்ள அன்பர்கள் விரைவில் எம்மை தொடர்பு கொள்ளவும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Read more...

இளந்தமிழர் இயக்கத்தின் துண்டறிக்கை பற்றி ”தினமலர்” மீண்டும் விசமப் பிரச்சாரம்

Monday, April 27, 2009

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசிற்கு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு உதவி வருகின்றது. இதனை கண்டித்தும் தமிழினத் துரோகக் காங்கிரஸ் கட்சியை தமிழிகத்திலிருந்து விரட்டும் நோக்கிலோம் வருகின்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரசுக்கு தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்று இளந்தமிழர் இயக்கம் பிரச்சாரம் செய்து வருகின்றது.

மாவீரன் முத்துக்குமாரை யாரென்று ஏளனம் செய்த தமிழினத் துரோகி ஈரோடு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கண்டிக்கும் வகையில் ஈரோட்டில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் ஒரு நிகழ்ச்சி ஏற்படாகி அதற்கான துண்டறிக்கை மக்களிடம் கொடுக்கப்பட்டது. அத்துண்டறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


இத்துண்டறிக்கையையும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள
துண்டறிக்கையையும் இணைத்து ”தினமலர்” ஆட்காட்டி உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி பின்வருமாறு கூறுகிறது :

இளங்கோவனை கிண்டல் செய்து பிரசுரம் : தமிழ் அமைப்புகள் செயலால் காங்., எரிச்சல்
தினமலர், ஏப்ரல் 25,2009,20:31 IST

ஈரோடு : இளங்கோவனைக் கேலி செய்து 'பயோ-டேட்டா' வடிவில் ஈரோடு முழுவதும் வினியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரங்கள் காங்கிரசாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் ஈரோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மதுபாட்டிலுடன் நடனமாடுவது போல் கேலிச்சித்திரம் வரைந்து, ஈரோடு முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.'கருணாநிதியின் 'டாஸ்மாக்'கும்; குடிப்பழக்கத்தால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஞாபகமறதியும்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த துண்டுப் பிரசுரத்தில் உள்ள பயோ-டேட்டா வருமாறு:

பெயர்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
ஊர்: பிறப்பால் கன்னடன்; பிழைப்பது தமிழகத்தில்.
பதவி: மத்திய மந்திரி.
தொழில்: குடிப்பழக்கத்தால் மறந்துவிட்டது.
பிடிக்காதது: தமிழர்கள்.
பிடித்தது: எல்லா வகை மதுபானங்களும்.
மறந்தது: தோழர் முத்துக்குமாரின் தியாகம்.
மறக்காதது: தமிழர்களுக்குத் துரோகம்.
சொத்து: சோனியாவின் செருப்பு.
கோபப்படுவது: கருணாநிதியின் நடிப்பு.
பொழுதுபோக்கு: உட்கட்சி மோதல்; சுவரொட்டிகள் கிழிப்பது.
பட்டப்பெயர்: தமிழனத் துரோகி.
சாதித்தது: ஈரோட்டில் 'சீட்' வாங்கியது.
எதிர்பார்ப்பது: மீண்டும் பதவி.
நடக்கவிருப்பது: 'டிபாசிட்' இழப்பு.

தமிழக மக்களே... 'காங்கிரசை ஒழிப்பதே என் முதல்பணி' என முழங்கிய பெரியார் பிறந்த மண்ணில் வாழும் ஈரோடு வாழ் மக்களே... உங்கள் ஓட்டுக்களை இளங்கோவனுக்கு வாய்க்கரிசியாய் மாற்றுங்கள்!இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 'சாணிப்பால் தெளித்து பழைய செருப்பால் அடிக்கும் முகாம்' என்ற தலைப்பில், 'இளந்தமிழர் இயக்கம்' சார்பில் வினியோகிக்கப்பட்டுள்ள மற்றொரு துண்டுப் பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:வழிப்பறி செய்தல், கொள்ளையடித்தல், கன்னம் வைத்து திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோரை தமிழர்கள் கழுதை மேல் உட்காரவைத்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி பழைய செருப்பால் அடித்து ஊர்வலம் விடுவது வழக்கம்.அன்று தமிழ் மக்களுக்குப் பல்வேறு இடையூறு செய்த கன்னட சாளுக்கிய மன்னன் மீது, ராஜராஜ சோழன் படை எடுத்து, மராட்டியம் வரை துரத்தி அடித்தான்.தமிழக மீனவர்களுக்காகவும், தமிழீழ மக்களுக்காகவும் உயிர்த்தியாகம் செய்த, 'தோழர் முத்துக்குமாரை' - அவன் யார் என்று கேட்ட கன்னடன் இளங்கோவன் தமிழினத்துக்கே துரோகம் செய்கிறான்.'முத்துக்குமார் யார்?' எனத் தெரியாத இளங்கோவனுக்கும், மற்றவர்களுக்கும் நினைவுத்திறன் வளர, மறக்காமல் இருக்க சாணிப்பால் தெளித்து, செருப்பால் அடிக்கும் முகாம், ஈரோட்டில் ஏப்., 25 மாலை 5 மணிக்கு பன்னீர்செல்வம் பூங்காவில் நடைபெறும். குறிப்பு: தமிழர்கள் பழைய செருப்புகளை பத்திரமாக வைத்திருந்து முகாம் நடைபெறும் நாளில் அதை கொண்டு வரவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுபோல், பல்வேறு நோட்டீஸ்கள் அச்சிடப்பட்டு நகர் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், காங்கிரசார் எரிச்சலடைந்துள்ளனர். 'இருக்கிற தலைவலி போதாதென்று இதுவேறயா' என போலீசாரும் புலம்பி வருகின்றனர்

இணைப்புப
தினமலர் இணையதளச் செய்தி :

Read more...

மாவீரன் முத்துக்குமாருக்கு மணிமண்டபம் : உலகத்தமிழர்களுக்கு முத்துக்குமார் தந்தை கடிதம்

Saturday, April 4, 2009

:  மாவீரன் முத்துக்குமாருக்கு நினைவு மண்டபம் :
உலகத் தமிழர்களுக்கு முத்துக்குமாரின் தந்தை கடிதம்
 
சென்னை- 17, 4.04.09.

ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இனவெறிப் போரை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தீக்குளித்து ஈன்னுயிர் நீத்த மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் நினைவு மண்டபம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ட உள்ளன.

ஈழத்தமிழர்களின் இன்னல்களை விளக்கியும், "இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம்" என்று 1 இலட்சம் கையெழுத்துகளை திரட்டியும் "தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்" என்ற பெயரில் இளந்நதமிழர் இயக்கம் சார்பில் கடந்த 25.02.09 தொடங்கி 0.6.03.09 வரை தமிழ்நாடு முழுக்க பரப்புரைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இப்பயணத்தின் முடிவில் சேலத்தில் 6.03.09 அன்று நடந்த "இன எழுச்சி மாநாட்டில்" மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இவ்வறிவிப்பிற்கு முத்துக்குமாரின் தந்தை குமரேசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் திரு.த.வெள்ளையன், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பழ.நெடுமாறன்  ஆகியோரை சந்தித்து இளந்தமிழர் இயக்கம் ஆதரவு திரட்டியது. அவர்களும் இம்முயற்சிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தருவதாக உறுதியளித்துள்ளனர்.
 
இது குறித்து உலகத் தமிழர்களுக்கு மாவீரன் முத்துக்குமாரின் தந்தை ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
 
தமிழர்களுக்கு வணக்கம். எனது மகன் முக்குமார், வீரத்தமிழ்மகன் மாவீரன் என்ற உயர்ந்த தகுதியை அடைந்திருப்பதில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் இனத்திற்காக அவன் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டது அவனது இழப்பையும் கடந்த பெருமிதத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது.
 
தேர்தல், சாதி அரசியலைத் தவிரி்த்து, புரட்சிகர மாற்று அரசியலை தமிழக இளைஞர்களும், மாணவர்களும் முன்னெடுக்க வேண்டும் என்பது முத்துக்குமாரின் இறுதிக் கடித வேண்டுகோள். இந்த வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்று இளந்தமிழர் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மார்ச் 6மு் தேதி சேலத்தில் நடத்திய "இன எழுச்சி மாநாட்டில்" "வீரத்தமிழ் மகன் மாவீரன் முத்துக்குமாருக்கு நினைவு மண்டபம் எழுப்புவோம்" என்ற தீர்மானத்தை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் செயலாகும்.
 
இளந்தமிழர் இயக்கத்தினர் முத்துக்குமாருக்கான நினைவு மண்டப அடிப்படைப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அவர்களது முன்முயறச்சியில் எங்கள் குடுமத்தினருக்கு முழு சம்மதம் உள்ளது. இந்த நினைவு மண்டபம் தமிழர் வரலாற்றில் அழியாப் பணிகளை மேற்கொள்ளும் அறிவு மையமாகச் செயல்படும் என்று இளந்தமிழர் இயக்கத்தினர் உறுதி தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த சமூகமும் இந்த முயற்சியில் கைகோர்த்துச் செயல்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
 
நாள்  04.04.09.
இடம்  திருச்சிராப்பள்ளி
 
                                                                                                   அன்புடன்,
                                                                                                   S.குமரேசன்
 
 
இவ்வாறு அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
முத்துக்ககுமாரின் தந்தை வெளியிட்ட கடிதத்திற்கு ஏற்ப , விரைவில் மணி மண்டபம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு அதற்கான முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும்.
தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.
 
(குறிப்பு : முத்துக்குமார் தந்தையின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)

Read more...

ஈழத்தமிழர் ஆதரவு : மாணவர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை : இளந்தமிழர் இயக்கம் கணடனம்

Friday, March 20, 2009

ஈழத்தமிழர் ஆதரவு : கடலூர் அரசுக் கல்லூரி
மாணவர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை
இளந்தமிழர் இயக்கம் கணடனம்

 சென்னை, 20.
 
ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இனவெறிப் போரை இந்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என தமிழகத்தின் அனைத்துக் பள்ளி, கல்லூரி மாணவர்களும் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள்  30 சனவரி அன்று முதல் காலவரையற்ற உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தற்பொழுது அப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அக்கல்லூரி முதல்வர் சந்திரிகா பெற்றோர்களை அழைத்து வருமாறுக் கூறியும், சில மாணவர்களை வகுப்புக்கு செல்ல அனுமதி மறுத்தும்  பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கல்லூரி முதல்வரின் இந்நடவடிக்கை மிகவும் கண்டனத்திற்குரியது.
 
மேலும், அரசு தான் இவ்வாறு செய்யக்கூறுகிறது என்று அம்முதல்வர் கூறுவது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இது அரசின் முடிவா அல்லது அக்கல்லூரி முதல்வரின தனிப்பட்ட முடிவா என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
 
கல்லூரி நிர்வாகம், மாணவர்களை தேர்வு எழுத அனுமதித்து அவர்களது கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அம்மாணவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் நல்லதுரை மேற்கொண்டு வருகின்றார். 
 
தோழமையுடன்,
க.அருணபாரதி,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.

Read more...

காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் : இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு

Monday, March 16, 2009

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம்
குறுஞ்செய்தி(SMS) தகவல் மையம் அமைப்பு
இளந்தமிழர் இயக்கம் முடிவு
 
சென்னை, 17.
 
தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள இளந்தமிழர் இயக்கம் முடிவெடுத்திருக்கிறது.
 
கடந்த ஞாயிறு (15-03-09) அன்று சென்னையில் நடந்த இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் கோ.ராஜாராம் தலைமை தாங்கினார்.
 
தமிழீழ மக்களின் துயரை விளக்கும் தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணத்திற்கும், "இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" என்று 1 இலட்சம் கையெழுத்துகள் பெறும் கையெழுத்து இயக்கத்திற்கும், சேலம் இன எழுச்சி மாநாட்டிற்கும் உதவிகள் செய்தவர்கள், நன்கொடை வழங்கியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி முன்மொழிந்தார்.
 
ஈழத்தமிழர்களைக் கொல்வதற்காக சிங்கள அரசுக்கு ஆய்த உதவிகள் செய்த காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்காக குறுஞ்செய்தி தகவல் மையம் ஒன்றை அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
குறுஞ்செய்தி தகவல் மையம்
 
இக்குறுஞ்செய்தி தகவல் மையத்தில் சந்தாதாரர்கள் ஆக ரூ.100 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும். கட்டியவர்களின் கைபேசி எண்ணுக்கு காங்கிரசுக்கு எதிரான தகவல்கள், காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் காங்கரசைப் பற்றிக் குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்கள், ஈழத்தமிழர் ஆதரவு போராட்டச் செய்திகள், ஈழப்போர் குறித்த இணையதள செய்திகள் என பல செய்திகளும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். இதில் திரட்டப்படும் நிதி பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படும் என்பதால் இதனை நன்கொடை என்ற பெயரில் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் இணைய விரும்பும் தமிழ் உணர்வாளர்கள், 9841949462 மற்றும் 9894310997 ஆகிய எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பித் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
தோழமையுடன்,
க.அருணபாரதி,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.
 
 

Read more...

தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் - இன எழுச்சி மாநாடு (28.02.09 - 06.03.09)

Sunday, March 15, 2009

இளந்தமிழர் இயக்கம் நடத்திய
தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் - இன எழுச்சி மாநாடு
(28.02.09 - 06.03.09)


ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக பலிவாங்கிக் கொண்டிருக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆய்த உதவிகளை இந்திய அரசு தனக்கே உரிய தமிழர் விரோத ஆரிய இனவெறியுடன் செய்து வருகின்றது. போரை நிறுத்து என்று தமிழகமே போராடி வரும் நிலையிலும் தமிழக சட்டமன்றம் 3 முறை தீர்மானம் நிறைவேற்றியுள்ள போதிலும் இந்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. மாறாக சிங்கள அதிபருடனும் இராணுவத் தளபதியுடனும் நல்லுறவு பேணும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு. தமிழினத்திற்கு துரோகம் இழைக்கும் இந்திய அரசின் இப்போக்கைக் கண்டித்து மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள் உயிராயுதம் ஏந்தி தன்னுடலை தீக்கிரையாக்கினர். தேர்தல் அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனம் முத்துக்குமாரின் அறிக்கையால் இனங்காட்டப்பட்டது. முத்துக்குமாரின் எழுச்சி மிகு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தேர்தல் கட்சிகளை சாராத உணர்வுள்ள மாணவர்கள், இளைஞர்கள் எல்லோரும் ஒன்று கூடி ஒரு இயக்கமாக செயல்படலாம் என முடிவெடுத்தோம். அதன் விளைவு தான் “இளந்தமிழர் இயக்கம்”. இவ்வியக்கத்தின் முதல் வேலைத் திட்டமாக தமிழீழ ஆதரவுப் பரப்புரைப் பயணத்தை நடத்தினோம்.

இப்பரப்புரைப் பயணத்தின் மூலம், ஊடகங்களால் மறைக்கப்பட்டுள்ள தமிழீழ மக்களின் இன்னல்களை தமிழகத்தின் கிராமங்களுக்கு சென்று விளக்கியும், இனத் துரோhகத்தில் ஈடுபட்டிருக்கும் காங்கிரசுக் கட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன் என 1 இலட்சம் கையெழுத்துகளை மக்களிடம் திரட்டவும் அதனை சேலத்தில் ஒரு மாநாடு நடத்தி அதில் சமர்ப்பிக்கவும் திட்டமிடப்பட்டது.

குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டு, 25-02-09 காலை தஞ்சை கமலா திரையரங்கு அருகில் நடந்த விழாவில் பயணம் தொடக்கி வைக்கப்பட்டது. திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, எழுத்தாளர் தூரன் நம்பி, ஓவியர் புகழேந்தி உட்பட பல தலைவர்கள் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பரையாற்றினர். பயணத்திட்டம் இருக் குழுக்களாக பிரிக்கப்பட்டது. வட தமிழ்நாடு நோக்கி ஒரு அணியும், தென் தமிழ்நாடு நோக்கி ஒரு அணியும் திட்டமிடப்பட்டிருந்தது.

வட தமிழ்நாடு நோக்கிச் செல்லும் அணிக்கு தோழர் ம.செந்தமிழன் தலைமை தாங்கினார். தென் தமிழ்நாடு நோக்கிச் செல்லும் அணிக்கு இளந்தமிழர் இயக்க நிர்வாகக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சேசுபாலன் ராஜா, வழக்கறிஞர் செபா கௌதம் ஆகியோர் தலைமை தாங்கினர். இரு குழுவினரும் சேலத்தில் மார்ச் 6 அன்று நடைபெறும் இன எழுச்சி மாநாட்டை வந்தடையும்படி வழித்தடம் திட்டமிடப்பட்டது.

வட தமிழ்நாடு அணி

தஞ்சை தொடக்க நிகழ்ச்சியிலிருந்து கிளம்பிய பயணக்குழுவினருக்கு இளந்தமிழர் இயக்கத் தோழர்கள் கென்னடி, கு.ராமகிரு‘;ணன், முனி மற்றும் த.தே.பொ.க. தோழர்கள் வழியனுப்பி வைத்தனர். பயணக்குழு முதலில் பாப்பாநாடு பகுதியை அடைந்தது. அங்கு நடந்த பரப்புரைக் கூட்டத்தில் இயக்குநர் மணிவண்ணன், ஆர்;.கே.செல்வமணி, தமிழ் உணர்வாளர் காமராஜ் உள்ளிட்டோர் பயணக்குழுவினரை வரவேற்று வாழ்த்தி உரையாற்றினர். அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு மன்னார்குடியை அடைந்தது. தமிழ் உணர்வாளர் பன்னீர் செல்வம் தலைமையில் திரண்டிருந்த உணர்வாளர்கள் வரவேற்பு நல்கினர்.

பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு திருத்துறைப்பு+ண்டி நகரத்தை வந்தடைந்தது. த.தே.பொ.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., தே.மு.தி.க. தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் திருத்துறைப்பு+ண்டி நகரத்திலிருந்து கிளம்பிய பயணக்குழு வேதாரண்யம் பகுதியை சென்றடைந்தது. புலவர் வரதராஜன், ஆசிரியர் சிவவடிவேல், தமிழ்த் தேச தொழிற்சங்க முன்னணி தியாகராஜன் உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர்.

பின்னர் குடந்தையை நோக்கி பயணக்குழு பயணமானது. குடந்தைத் தமிழ்க் கழக தோழர்கள் சா.பேகன், சுடர், அன்பு உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு நடந்த பரப்புரைக் கூட்டத்தில் மாணவர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்பு, சீர்காழி நோக்கி பயணக்குழு சென்றது. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த ஈகி இரவிச்சந்திரன் வீட்டிற்கு பயணக்குழுவினர் சென்று அவர்தம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். ஈகி இரவிச்சந்திரனுக்கு வீரவணக்கம் செலுத்தியபடி பரப்புரைக் கூட்டம் நடந்தேறியது. அதன் பின்பு கொள்ளிடம், படுகை உள்ளிட்ட பகுதிகள் வழியாக பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி சிதம்பரம் நகரத்தை வந்தடைந்தது, பயணக்குழு.

த.தே.பொ.க., தமிழ் காப்பணி, தமிழக உழவர் முன்ணனி உள்ளிட்ட அமைப்புத் தோழர்கள் சிதம்பரம் நகரில் பயணக்குழுவினரை வரவேற்றனர். சிதம்பரம் நகரத்தில் சிறப்பான பொதுக்கூட்டம் நடந்தது. பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு நெல்லிக்குப்பத்தை வந்தடைந்தது. மருத்துவர் சுந்தரம் தலைமையில் திரண்டிருந்த தமிழ் உணர்வாளர்கள் நெல்லிக்குப்பத்தில் பயணக்குழுவினரை வரவேற்றனர். அங்கு நடந்த பரப்புரைக் கூட்டத்திற்கு பின்பு பயணக்குழு விழுப்புரம் நகரத்தை நோக்க நகர்ந்தது.

தமிழ் உணர்வாளர் ஏழுமலை தலைமையில் திரண்டிருந்த பல்வேறு இயக்கத்தவர்களும் தமிழ் உணர்வாளர்களும் விழுப்புரம் வந்தடைந்த பயணக்குழுவினரை வரவேற்றனர். அங்கு நடந்த பரப்புரைக் பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு திருவண்ணாமலை நகரத்தை வந்தடைந்து பின்னர் ஜோலார்பேட்டை சென்றது. விடுதலை சிறுத்தைகள் மற்றும் பா.ம.க. தோழர்கள் திரண்டிருந்து பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழுவினர் களம்பு+ர் நகரத்தை வந்தடைந்தனர். தமிழர் கழகம் தோழர் பெருமாள் தலைமையில் திரண்டிருந்த தமிழ் உணர்வாளர்கள் பயணக்குழுவினரை வரவேற்றினர். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் இயக்குநர் வே.சேகர் எழுச்சியுரை ஆற்றினார்.

பிறகு பயணக்குழு வேலூர் வழியாக ஆம்புர் நகரத்தை வந்தடைந்தது பயணக்குழு. ம.தி.மு.க ஜீவா, சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல தமிழ் உணர்வாளர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் வாணியம்பாடியை சென்றடைந்தது பயணக்குழு. பின்னர் அங்கிருந்து ஜோலார்பேட்டை சென்றது. திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தோழர் சோலைப் பிரியன் மற்றும் பா.ம.க. தோழர்கள் பலரும் பயணக்குழுவினரை வரவேற்று பரப்புரைக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினர்.

பின்னர் பயணக்குழு ஓசூர் நகரத்தை வந்தடைந்தது. பயணக்குழுவை வரவேற்று தமிழர் உரிமைக் கூட்டமைப்பினர் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். பா.ம.க. விடுதலைச் சிறுத்தைகள், த.தே.பொ.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் உரை நிகழ்த்தினர்.

பின்னர் பயணக்குழு காவிரிப்பட்டினத்தை வந்தடைந்தது. அங்கு பெ.தி.க.வினர் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு பெண்ணகரம் நகரத்தை வந்தடைந்தது. பழங்குடியினர் பாதுகாப்பு சங்க அமைப்பாளர் தோழர் நஞ்சப்பன் தலைமையில் திரண்டிருந்த தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் தர்மபுரி நகரத்தை நோக்கிக் கிளம்பியது பயணக்குழு. தர்மபுரியிலிருந்து கிளம்பி மேட்டூர், இளம்பிள்ளை, ஏற்காடு வழியாக சேலம் மாநகரத்தை வந்தடையும் வரை பல இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. பெ.தி.க. தோழர்கள் பெருமாள், டேவிட் உள்ளிட்டோர் ஏற்காடு நகரிலும் கிராமங்களிலும் பரப்புரை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தென் தமிழ்நாடு அணி

25-.02.09 அன்று தஞ்சை நகரத்தில் தொடங்கிய பயணம் பிற்பகலில் செங்கிப்பட்டியை வந்தடைந்தது. த.தே.பொ.க. செங்கிப்பட்டி நகரச் செயலாளர் குழ.பால்ராசு தலைமையில் திரண்டிருந்த த.தே.பொ.க. தோழர்கள் பயணக்குழுவினருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு ஆச்சாம்பட்டி, காமாட்சிபுரம் பகுதிகளில் பரப்புரை நடத்தியது. பின்னர் தச்சங்குறிச்சி, ஆகாசங்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகள் வழியாக பரப்புரை மேற்கொண்டபடி புதுக்கோட்டை நகரத்தை வந்தடைந்தது, பயணக்குழு. புதுக்கோட்டை மாவட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் தோழர் முத்துக்குமார், தமிழர் தேசிய இயக்கம் சத்தியமூர்த்தி ஆகியோர் எங்களை வரவேற்றார். வழக்கறிஞர் முத்து, பா.ம.க., உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புதுக்கோட்டை பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர். நகர் என புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் பயண ஊர்தி பரப்புரை மேற்கொண்டது. இரவு புதுக்கோட்டையில் பயணக்குழு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மறுநாள் 26.02.09 அன்று புதுக்கோட்டையிலிருந்து பொன்னமரவாதி, திருப்பத்தூர், காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. வழக்கறிஞர்கள் சேசுபாலன் ராஜா, செபா கௌதம் ஆகியோர் கூட்டங்களில் உரை நிகழ்த்தினர். மறுநாள் 27.02.09 அன்று ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், கொத்தமங்கலம், அறந்தாங்கி உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி கோட்டைப்பட்டினம் நகரத்தை பயணக்குழு அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை தோழர்கள் மணிவண்ணன், இரும்பொறை, இராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இரவு கோட்டைப் பட்டினத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளை பா.ம.க.வினர் செய்திருந்தனர்.

28.02.09 அன்று மிமீசல், தொண்டி, தேவிப்பட்டினம் பகுதிகள் வழியாக இரமேஸ்வரம் நகரத்தை பயணக்குழு அடைந்தது. வழிநெடுக பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி பயணக்குழுவினர் பயணித்தனர். ம.தி.மு.க. இளங்கோ உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்று உபசரித்தனர். மறுநாள் 01.03.09 அன்று இராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி வந்தடைந்த பயணக்குழுவை த.தே.பொ.க. திருச்செந்தூர் பகுதி அமைப்பாளர் தோழர் தமிழ்மணி தலைமையிலி திரண்டிருந்த தோழர்கள் வரவேற்றனர். பின்னர் தூத்துக்குடியில், பிரேம் நகர், காமராஜ் கல்லூரி, ஸ்பிக் நகர், பழைய காயல், வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், கொழுவ நல்லூர் பகுpகளில் பரப்புரை மெற்கொண்டனர். கொழுவ நல்லூரில் மாவீரன் முத்துக்குமாரின் வீட்டிற்கு சென்ற பயணக்குழுவினரை முத்துக்குமாரின் பாட்டி அன்புடன் வரவேற்றார். சேலம் ‘இன எழுச்சி மாநாட்டி’ற்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்துவிட்டு கிளம்பிய பயணக்குழு குறும்பு+ர் கடைத்தெருவில் பரப்புரை மேற்கொண்டது. பின்னர், திருச்செந்தூர் நகரத்தை வந்தடைந்துது. தமிழ் உணர்வாளர் தமிழ்த்தேசியன், விடுதலை சிறுத்தைகள் மாணவர் அமைப்புத் தோழர்கள் உள்ளிட்ட பல உணர்வாளர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர்.
02.03.09 அன்று திருச்செந்தூர் நகரத்திலிருந்து கிளம்;பிய பரப்புரை பயணக்குழு, திருச்செந்தூர் கடை வீதி, பேருந்து நிலையம், தென் திருப்பேரை, ஆழ்வார் திருநகரி, கருங்குளம், செய்துங்கநல்லூர் பகுதிகளில் பரப்புரை மெற்கொண்டபடி திருநெல்வேலி நகரத்தை வந்தடைந்தது. நெல்லையில் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த பீட்டர் உள்ளிட்ட தோழர்கள் எவ்வளவோ முயன்றும் நெல்லை நகரத்தில் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை அனுமதி கொடுக்காமல் மறுத்தது. ஆகையால் நகரத்தில் பரப்புரை மேற்கொள்ளாமல் நெல்லை புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. நெல்லை நகரத்திலிருந்து கிளம்பி தென்காசி அருகில் உள்ள முள்ளிக்குளம் கிராமத்தை வந்தடைந்தது பயணக்குழு. பயணக்குழுவினரை வரவேற்ற கிராம மக்கள் முள்ளிக்குளம் பள்ளி அருகில் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். ஈழத்தமிழர் சிக்கல் குறித்த நாடகமும், பாடல் நிகழ்ச்சியும் பயணக்குழுவினரால் நடத்தப்பட்டன. வழக்கறிஞர் செபா, அருணபாரதி மற்றும் போர் நிறுத்தம் கோரி நடத்தப்பட்ட சாகும் வரை உண்ணாப் போராட்டத்தில் கலந்து கொண்ட முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த சேலம் சட்டக்கல்லூரி மாணவர் ராஜே‘; உள்ளிட்டோர் உரையாற்றினார். முள்ளிக்குளம் கிராமத்திலேயே இரவு தங்கியது பயணக்குழு.

03.04.06 அன்று முள்ளிக்குளத்திலிருந்து கிளம்பிய பயணக்குழு திருவல்லிப்புத்தூர் நகரத்தை வந்தடைந்த போது மாற்றுத் திறனுக்கான கல்வி அமைப்;ப(TEST) நடத்தி வரும் ஜோ உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி வத்திராயிருப்பு நகரத்தை வந்தடைந்தது பயணக்குழு. தமிழ் உணர்வாளர்கள் காளீசுவரன், குறிஞ்சிக்கபிலன் உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். வத்திராயிருப்பு சந்தை, மகாராஜபுரம், தம்பிப்பட்டி, அயன்கரிசில்குளம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடைந்தது பயணக்குழு. த.தே.பொ.க. மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆனந்தன் தலைமையில் அங்கு திரண்டிருந்த த.தே.பொ.க., ம.தி.மு.க. அமைப்புத் தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு திருப்பரங்குன்றம், பழங்கானத்தம், ஜான்சிராணிப் பு+ங்கா, வடக்குமாசி வீதி, மெலமாசி வீதி சந்திப்பு, கோரிப்பாளையம், தந்தி அலுவலகம், பீ.வி.குளம், கோ.புதூர், செல்லூர் 50 அடி சாலை, 60 அடி சாலை, மேல பொன்னகரம், பிரித்தானியாபும் உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. கூட்டங்களில் த.தே.பொ.க. மதுரை மாநகரச் செயலாளர் தோழர் இராசு, த.தே.வி.இ. அமைப்பாளர் தோழர் கதிர் நிலவன், பெ.தி.க. மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் மாயாண்டி, வழக்கறிஞர் பகத்சிங், மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பேசினர். த.தே.பொ.க., த.தே.வி.இ., மதுரை சித்திரை தானி ஓட்டுநர் சங்கத்தினர் என பல்வேறு அமைப்பினர் பரப்புரைக்கான ஏற்பாடுகளை செந்திருந்தனர். இரவு மதுரையில் தங்கியது பயணக்குழு.

மறுநாள் 4.02.09 அன்று காலையில் மதுரையில் கிளம்பிய பயணக்குழு வாலாந்தூர், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி நகரங்ககளைக் கடந்து தேனி நகரத்தை வந்தடைந்தது. தேனி நகரில் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் திரண்டிருந்து பயணக்குழுவினருக்கு வரவேற்பு நல்கினர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு அள்ளி நகரம், பெரியக்குளம் பேருந்து நிலையம், சந்தை, தேவதானப்பட்டி, வத்தலகுண்டு, பள்ளப்பட்டி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தியது. பள்ளப்பட்டியில் மாவீரன் இரவி வீட்டிற்கு பயணக்குழுவினர் சென்றனர். இரவியின் மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் பயணக்குழுவினரை வரவேற்று உபசரித்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு அம்பையநாயக்கனூர், கொடை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி திண்டுக்கல் நகரத்தை வந்தடைந்தது. அங்கு, திண்டுக்கல் மாவட்ட பெ.தி.க. மாவட்டச் செயலாளர் தோழர் துரை.சம்பத், தாமரைச்செல்வன் உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். இரவு திண்டுக்கல் நகரத்தில் தங்கியது பயணக்குழு.

மறுநாள் 05.02.09 அன்று காலை கிளம்பிய பயணக்குழுவினர் திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம், அனுமந்தன் நகர் பகுதிகளில் பரப்புரை மெற்கொண்டபடி எரியோடு, கோவிலூர், குஜிலியம்பரை, பாளையம், கூடலூர், ஜெதாபி உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி ஈரோட்டை அடைந்தது. சி.பி.ஐ.-எம்.எல். மாவட்டச் செயலாளர் அபிரகாம், கணேசன், தமிழர் தேசிய இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் வீரப்பன் உள்ளிட்டோர் பரப்புரைக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். ஈரோடு கொல்லம்பாளையத்தில் த.தே.பொ.க., தி.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரே‘; உள்ளிட்ட தோழர்கள் எங்களை வரவேற்றனர். கொல்லம்பாளையம், சூரம்பட்டி, கரங்கல்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. த.தே.பொ.க. அமைப்பாளர் இளங்கோவன், சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தின் அமைப்பாளர் இரத்தினசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் பரப்புரைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இரவு கோபிசெட்டிப்பாளைத்தை பயணக்குழு வந்தடைந்தபோது ம.தி.மு.க. வழக்கறிஞர் கந்தசாமி, த.தே.பொ.க. தோழர் இளையராஜா உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர்.

பயணத்தின் இறுதி நாளான 06.02.09 அன்று காலையில் கோபியில் தொடங்கிய பரப்புரை, கரட்டடிபாளையம், கோபி பேருந்து நிலையம், கவுந்தபாடி நான்கு ரோடு சந்திப்பு, பேருந்து நிலையம், கலங்கை பாளையம், குன்னத்தூர் கிடங்கு, சேவக்கவுண்டனூர், பெரியபுலியு+ர், காளிங்கராயன்பாளையம் பேருந்து நிலையம், பவானி, குமாரப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் 4ட்டங்கள் நடத்தப்பட்டு சேலம் மாநகரத்தை அடைந்தது பயணக்குழு. இக்கூட்டங்களில், ம.தி.மு.க.வைச் சார்ந்த க.த.மதியழகன், பாரதிதாசன் இலக்கிய மன்றம் க.சு.அண்ணாதுரை, திராவிடர் கழகம் அ.பாலன், கொங்கு நண்பர்கள் சங்கத் தலைவர் சங்கர், விடுதலை சிறுத்தைகள் சிறுத்தை வளவன், அம்பேத்கர், வழக்கறிஞர் ப.பா.மோகன், லெமூரியா கழகம் அமைப்பாளர் பார்த்திபன், வழக்கறிஞர்கள் சிவராமன், ச.பாலமுருகன், இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த எம்.பாலமுருகன், இந்திய கம்யு+னிஸ்ட் கட்சி கந்தசாமி, அகில இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சோ;ந்த திருமலை, பாலதண்டாயுதம் உள்ளிட்ட பல தலைவர்கள் பயணக்குழுவினரை வரவேற்று உரை நிகழ்த்தினர்.

இன எழுச்சி மாநாடுசேலத்தில் மார்ச் 6 அன்று மாலை போஸ் மைதானத்தில் இன எழுச்சி மாநாடு சிறப்பாக நடந்தேறியது.இசைக்குழுவினரின் இசைநிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கினர். இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் இராஜாராம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பெ.தி.க. மாவட்டச் செயலாளர் ப.பாலு வரவேற்புரையாற்றினார்.


இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி இளந்தமிழர் இயக்கம் தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்தும், தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு பின் செல்லாமல் மாணவர்களும் இளைஞர்களும் முத்துக்குமாரின் கட்டளைக்கு ஏற்ப மாற்று அணியாக திரள வேண்டும் என்றும் உரையாற்றினார்.


ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய மாவீரன் முத்துக்குமாரின் பாட்டி, வேலூர் சீனிவாசனின் மனைவி ஆகியோருக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். முத்துக்கமாரின் கட்டளையை நீங்கள் தான் நிறைவேற்ற வேண்டும் என்று முத்துக்குமாரின் பாட்டி பேசினார். சீனிவாசன் தீக்குளித்த நிகழ்வையும் அவரை நேரில் கூட பார்க்க வராத தே.மு.தி.க. தலைவர் விசயகாந்த் பற்றியும் சீனிவாசனின் மனைவி பேசினார். இளந்நதமிழர் இயக்கம் சார்பில் மாவீரன் முத்துக்குமாருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு அதில் தீக்குளித்த ஈகிகள் அனைவரையும் நினைவு கூறும் வகையில் சின்னங்கள் எழுப்பப்படும் என்ற அறிவிப்பை இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் நல்லதுரை வெளியிட்டார்.

இளந்தமிழர் இயக்கத் தோழர்கள் வழக்கறிஞர் நல்லுதுரை, ம.செந்தமிழன், வழக்கறிஞர் செபா கொளதம் உள்ளிட்டோர் பரப்புரைப் பயண அனுபவங்களையும் இனி நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் என்னென்ன என்பது குறித்தும் எழுச்சியுரையாற்றினர்.


காங்கிரசை ஆரிய இனவெறிக் கட்சி என்று பிரகடனப்படுத்தியும், புலிகள் மீதான தடையை நீக்கி ஈழவிடுதலைப் போரை அங்கீகரிக்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மாநாட்டுத் தீர்மானங்கள் இளந்தமிழர் இயக்கத் தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக படித்தனர். பலத்த கரவொலியுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஓவியர் புகழேந்தி, எழுத்தாளர் தூரன் நம்பி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், பெரியார் தி.க. பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்றினர். மாநாட்டின் இறுதியில் தோழர் பிந்து சாரன் நன்றி கூறினார்.Read more...

சேலத்தில் நடந்த ”இன எழுச்சி மாநாடு” - தமிழீழ ஆதரவு பரப்புரை பயணம் நிறைவு

Monday, March 9, 2009

சேலத்தில் நடந்த "இன எழுச்சி மாநாடு"
தமிழீழ ஆதரவு பரப்புரை பயணம் நிறைவு
 
தமிழீழ மக்களின் இன்னல்கள் குறித்தும் இனத் துரோகக் காங்கிரசுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்பதனையும் வலியுறுத்தியும் கடந்த 25-02-09 அன்று தஞ்சையில் தொடங்கி வைக்கப்பட்டு இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் நடந்த தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம், சேலத்தில் நடந்த இன எழுச்சி மாநாட்டில் நிறைவுற்றது.
 
 சேலம் போஸ் மைதானத்தில் 06-03-09 அன்று மாலை நடந்த இம்மாநாட்டில் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன் என திரட்டப்பட்ட 1 லட்சம் கையெழுத்துகள் முன்வைக்கப்பட்டன. பெரியார் தி.க.வின் இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சியுடன் மாநாடு ஆரம்பமானது.
 
மாநாட்டிற்கு இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். அப்பொழுது இளந்தமிழர் இயக்கம் கட்சி சாராது தமிழ் இனத்தின் நலம் சார்ந்த மாணவர், இளைஞர் அமைப்பாகவே விளங்கும் என்றும் வருகின்ற நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர் என விரிவாக பிரச்சாரம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் நல்லதுரை, வழக்கறிஞர் செபா, ம.செந்தமிழன் உள்ளிட்டோர் எழுச்சியுரையாற்றினர். அப்பொழுது அவர்கள் பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களையும் காங்கிரசுக்கு எதிராக மக்களிடம் உருவாகியுள்ள மனநிலையையும் பற்றி எடுத்துக் கூறினர்.
 
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, பசுமை விகடன் எழுத்தாளர் தூரன் நம்பி, ஓவியர் புகழேந்தி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
 
ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரை தீக்கிரையாக்கி மாவீரர்களான முத்துக்குமாரின் பாட்டி மற்றும் சீனிவாசனின் மனைவி ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முத்துக்குமாரின் கட்டளை எதுவோ அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என முத்துக்குமாரின் பாட்டி கண்ணீர் உரையாற்றினார்.
 
மாநாட்டில் மாவீரன் முத்துக்குமாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என இளந்தமிழர் இயக்கம் நிர்வாகக் குழுத் தீர்மானத்தை வழக்கறிஞர் நல்லதுரை அறிவித்தார். 
 
காங்கிரசை "ஆரிய இனவெறிக் கட்சி" என்று பிரகடனம் செய்தும்,  புலிகள் மீதான தடையை நீக்கி தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழீழ ஆதரவாளர்கள் கொளத்தூர் மணி, சீமான் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரியும் தீர்மானங்கள் இளந்தமிழர் இயக்கத் தோழர்களால் மாநாட்டில் படிக்கப்பட்டு பலத்த கரவொலிக் கிடையே நிறைவேற்றப்பட்டன.

(குறிப்பு  : மாநாடு மற்றும் பயணம் குறித்த பல வேலைகளில் சிக்குண்டதால் செய்திகள் தாமதமாக வலையேற்றப்படுகின்றன. பொறுத்தருள்க! விரைவில் மாநாட்டுத் தீர்மானங்கள், மற்றும் பயண அனுபவங்கள் குறித்த தகவல்கள் வலையேற்றப்படும்)

Read more...

இளந்தமிழர் இயக்கம் நடத்தும் இன எழுச்சி மாநாடு(06-03-09)

Saturday, February 28, 2009

மாற்று அரசியலைக் கட்டியெழுப்புக
- மாவீரன் முத்துக்குமார்
--------------------------------------------------------------------------------------------------------------------------------

இளந்தமிழர் இயக்கம் நடத்தும்
இன எழுச்சி மாநாடு
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 
தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயண நிறைவு விழா
"காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" 1 லட்சம் கையெழுத்துகள் முன்வைப்பு

நாள் 05 மார்ச் 2009, மாலை 5.00 மணி
இடம் சேலம் போஸ் மைதானம்

பங்கேற்பாளர்கள்
தோழர் பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

தோழர் த.செ.கொளத்தூர் மணி,
தலைவர்,
பெரியார் திராவிடர் கழகம்

தோழர் தியாகு
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

திரு சிவாஜிலிங்கம்,
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இயக்குநர் மணிவண்ணன்

ஓவியர் புகழேந்தி

எழுத்தாளர் தூரன் நம்பி

க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்

இன உணர்வாளர்களே ! அணி திரள்வீர் !

--------------------------------------------------------------------------------------------------------------------------------
பேச :  9629130176, 9841949462
வலைப்பதிவு :
http://elanthamizhar.blogspot.com
மின்னஞ்சல் : elanthamizhar@gmail.com

Read more...