இளங்கோவன் மீது நடவடிக்கை : முதல்வருக்கு தந்தி/பேக்ஸ் அனுப்புங்கள்

Friday, May 8, 2009

இளங்கோவன் மீது நடவடிக்கை :

முதல்வருக்கு தந்தி/பேக்ஸ் அனுப்புங்கள்
இளந்தமிழர் இயக்கம் வேண்டுகோள்



ஈரோடு, 8.05.09.

தந்தை பெரியாரை இழிவாக பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சுக்காக அவர் மீது தமிழக முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வருக்கு தந்தி/பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்ப வேண்டும் என உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இளந்தமிழர் இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.

முதல்வருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்து. அதே போன்ற மாதிரிக் கடிதத்தை கீழே இணைத்துள்ளோம்.



உணர்வுள்ள தமிழர்கள் மின்னஞ்சல்/பேக்ஸ்/தந்தி என முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இளங்கோவன் மீது புகார் தெரிவிக்கவும்.

முதல்வரின் பேக்ஸ் எண் : 044-25676929

முகவரி : Chief Minister's Special Cell, Secretariat, Chennai 600 009.

மின்னஞ்சல் : cmcell@tn.gov.in

தோழமையுடன்,
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.



3 கருத்துகள்:

Albert Fernando May 8, 2009 at 7:27 AM  

தமிழக முதல்வரே ஒரு கையாளாகாத ஒரு நபர்; சொன்னதைச் செய்யக்கூடிய‌
நடுவணரசிடம் மிரட்டிக்கூட கேட்கத் திராணியில்லாத ஒருவர் தந்தியடித்து நாடகமாடும்
அவருக்கு தந்தி அனுப்பச் சொல்வதை விட சும்மாயிருக்கலாம்; அந்தத் தந்தியை வாங்கி அவர் என்னசெய்வார்? ஒருவார்த்தை இளங்கோவன் சொல்லியது தவறு என்றுகூடச் சொல்லப்போவதில்லை; அது ஒரு வெட்டி வேலை!?
நீங்கள் எழுச்சியோடு திரண்டு முற்றுகைப்போராட்டத்தை வழிநடத்தி உங்கள் வானளாவிய எதிர்ப்பைத் தெரிவியுங்கள்.
அதுவே போதும்
ஆல்பர்ட்.

Albert Fernando May 8, 2009 at 7:29 AM  

ஒவ்வொரு தமிழனும் இதை பார்க்கவேண்டும்.


தமிழனாய் பிறந்தவன் கண்களில் கண்ணீர் கட்டாயம் வரும்.

http://tamilsvoice.blogspot.com/

Anonymous May 8, 2009 at 3:03 PM  

Letter or Telegraph is no worth.Thamilaga Tamils have power bullet.That is called as vote.This is the time for the tamils.The Tamils should use their votes against the CM.