காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் : இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு
Monday, March 16, 2009
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம்
குறுஞ்செய்தி(SMS) தகவல் மையம் அமைப்பு
இளந்தமிழர் இயக்கம் முடிவு
சென்னை, 17.
தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள இளந்தமிழர் இயக்கம் முடிவெடுத்திருக்கிறது.
கடந்த ஞாயிறு (15-03-09) அன்று சென்னையில் நடந்த இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் கோ.ராஜாராம் தலைமை தாங்கினார்.
தமிழீழ மக்களின் துயரை விளக்கும் தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணத்திற்கும், "இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" என்று 1 இலட்சம் கையெழுத்துகள் பெறும் கையெழுத்து இயக்கத்திற்கும், சேலம் இன எழுச்சி மாநாட்டிற்கும் உதவிகள் செய்தவர்கள், நன்கொடை வழங்கியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி முன்மொழிந்தார்.
ஈழத்தமிழர்களைக் கொல்வதற்காக சிங்கள அரசுக்கு ஆய்த உதவிகள் செய்த காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்காக குறுஞ்செய்தி தகவல் மையம் ஒன்றை அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறுஞ்செய்தி தகவல் மையம்
இக்குறுஞ்செய்தி தகவல் மையத்தில் சந்தாதாரர்கள் ஆக ரூ.100 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும். கட்டியவர்களின் கைபேசி எண்ணுக்கு காங்கிரசுக்கு எதிரான தகவல்கள், காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் காங்கரசைப் பற்றிக் குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்கள், ஈழத்தமிழர் ஆதரவு போராட்டச் செய்திகள், ஈழப்போர் குறித்த இணையதள செய்திகள் என பல செய்திகளும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். இதில் திரட்டப்படும் நிதி பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படும் என்பதால் இதனை நன்கொடை என்ற பெயரில் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் இணைய விரும்பும் தமிழ் உணர்வாளர்கள், 9841949462 மற்றும் 9894310997 ஆகிய எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பித் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தோழமையுடன்,
க.அருணபாரதி,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.
0 கருத்துகள்:
Post a Comment