நடிகர் கமலஹாசனுக்கு இளந்தமிழர் இயக்கம் கடிதம்: சிறப்பு ஆதாரங்கள் வெளியீடு

Saturday, October 3, 2009

நடிகர் கமலஹாசனுக்கு இளந்தமிழர் இயக்கம் கடிதம்:
சிறப்பு ஆதாரங்கள் இளந்தமிழர் இயக்கத்தால் வெளியீடு
சென்னை, 03.02.09.

நடிகர் கமலஹாசன் தயாரித்து, நடித்து வெளிவந்திருக்கும் ”உன்னைப் போல் ஒருவன்” படத்தில் இசுலாமியர் விரோத இந்து மதவெறிக் கருத்துகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. சிறையில் தண்டனை அனுபவிக்கும் கைதிகளையும் கூட வெளியே அழைத்து வந்து கொல்ல வேண்டும் என்ற சட்ட விரோதமான வன்முறை கருத்து, இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து, கோவை சிறையிலிருக்கும், அல்-உம்மா இயக்கத் தலைவர் பி.டி.பாஷா அவர்கள், நடிகர் கமலஹாசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவரது வழக்கறிஞர் இராகவன் மூலம் இளந்தமிழர் இயக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற அக்கடிதத்தை இளந்தமிழர் இயக்கம் இன்று வெளியிடுகின்றது. (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது).





கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் தாலிபன், லஷ்கர் - இ தொய்பா போன்ற முஸ்லிம் பயங்கரவாத இயக்கங்களுக்கும், தொடர்பு உண்டு என்பது போலவும் இப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் தவறானது. கோவை குண்டு வெடிப்பு வழக்கு குறித்து காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கையில் இவ்வாறான தொடர்புகள் குறித்து எதுவும் கிடையாது.

இந்து மதவெறியர்களான ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பி.ஜே.பி. போன்ற அமைப்புகளுடன் இணைந்து கொண்டு காவல்துறையினரும் வன்முறையில் ஈடுபட்டனர் என்றும் அவர்களுக்கு மட்டுமே இதில் சம்பந்தம் உள்ளது என்றும் காவல்துறை அளித்த இறுதி அறிக்கையிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக அவ்வறிக்கையின் ஒரு பகுதியை (காவல்துறை தாக்கல் செய்த இறுதி அறிக்கையின் பக்கம் 16)நாங்கள் வெளியிடுகிறோம்.


பொய் செய்திகளை வெளியிட்டு சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இந்து மதவெறியைத் தூண்டி விடும் இப்படம் குறித்து கடும் கண்டனத்தை பதிவு செய்து நடிகர் கமலஹாசனுக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அக்கடிதத்தையும் இத்துடன் வெளியிடுகின்றோம்.

சிங்கள இனவெறி அரசின் அரச பயங்கரவாதத்தால் இரக்கமின்றி ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதற்கு எந்த கண்டனமும் தெரிவிக்காமல் வாய் மூடிக் கிடந்த இந்தியாவின் மற்ற மாநில மக்கள் குறித்து நடிகர் கமலஹாசனால் கேள்வி எழுப்புவதில்லை. ஆனால், மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தமிழகம் ஏன் மவுனமாக இருந்தது என்று மட்டும் அவரது திரைப்படத்தின் மூலம் அவர் கேட்கிறார். இதில் அவரது ஒரு தலைபட்சமான இந்தியச் சார்பு நிலை அரசியல் தான் வெளிப்படுகிறதே தவிர, மனித நேயம் வெளிப்படவில்லை.

இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் முறையான பதில் அளிக்காத பட்சத்தில் நடிகர் கமலஹாசன் மீது இளந்தமிழர் இயக்கம் சார்பில் வழக்குத் தொடரப்படும் என்றும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்,

க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.

நடிகர் கமலஹாசனின் ‘உன்னைப் போல் ஒருவன்’;
இந்து மதவெறியைக் கட்டமைக்கும் இசுலாமியர் விரோதத் திரைப்படம்
இளந்தமிழர் இயக்கம் நடிகர் கமலகாசனுக்கு எழுதிய கடிதம்


மதிப்பிற்குரிய நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு,

வணக்கம். அண்மையில் தாங்கள் தயாரித்து, நடித்திருக்கும் ‘உன்னைப் போல் ஒருவன்’ என்ற திரைப்படம் வெளியாகி தமிழகத் திரையரங்குகளில் ஓடி வருகின்றது. இத்திரைப்படம் இந்து மதவெறியைக் கட்டமைக்கும், இசுலாமியர் விரோதத் திரைப்படம் என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நால்வரையும் குண்டு வைத்துக் கொலை செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளது ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம். இது இந்திய அரசியல் சாசனத்திற்கும் இந்திய குற்றவியல் சட்டங்களுக்கும் மனித உரிமைச் சாசனங்களுக்கும் விரோதமானது ஆகும். இது ஒரு புனைவுதான் (குiஉவழைn) என்று நீங்கள் வாதிட முடியாது. ஏனெனில், இப்படத்தில் நீங்கள் குறிப்பிடும் சம்பவங்கள் அனைத்தும் உண்மைச் சம்பவங்கள். உண்மைச் சம்பவங்களை உங்கள் வசதிக்கு ஏற்ப திரித்துப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.

மேலும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வீடு, தி.மு.கவின் கொடி, முதல்வரின் குரல் ஆகியவற்றைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஆகவே ‘உன்னைப் போல் ஒருவன்’, ஒரு முழுப் புனைவு அல்ல.

இப்படத்தில் பயங்கரவாதிகள் என்பது போல் காட்டப்படும் நால்வருள், மூவர் இசுலாமியர்கள். ஒருவர் இந்து. அந்த ஒரு இந்துவும் கூட ஆயுத வணிகம் செய்து பிழைக்கின்றவரேத் தவிர அவருக்கு மதவெறி நோக்கம் எல்லாம் கிடையாது என்றும் இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக, இஸ்லாமியர்களுக்கும் மதவெறி நோக்கம் உள்ளது. ஆனால் இந்துக்களுக்கு மதவெறி இல்லை என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளீர்கள்.

2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்து மதவெறியர்களால் நடத்தப்பட்ட கலவரங்களில் தனது மனைவியை இழந்த ஒரு இசுலாமியர், 1998 ஆம் ஆண்டே அதற்காக கோவையில் குண்டு வைத்தார் என்று காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள். இது உண்மையைத் திரித்து ஒரு சமூகத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் குற்றச் செயலாகும்.

கோவை தொடர் குண்டு வெடிப்புகள் வழக்கில் சதிக் குற்றம் சுமத்தப்பட்ட கேரள மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் மதானி நாசர், குற்றம் நீரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.



1993 ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 இசுலாமியர்கள், 14 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரபராதிகள் என தடா நீதிமன்றத்தாலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு இசுலாமியர்கள் பல வழக்குகளில் குற்றவாளிகள் அல்ல என்று பல நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு வந்துள்ளனர்.

ஆனால் உங்கள் திரைப்படத்தில் கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ‘ஈடுபட்டவர்கள்’ கொல்லப்பட வேண்டும் என்று கூறுகிறீர்கள். நீதிமன்றங்களே விடுதலை செய்த பிறகு அவர்களுக்கு மரண தண்டனை அளிக்க விரும்பும் நீங்கள் இஸ்லாமியர் மீதான வெறியைத் திணிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறோம்.

திரைப்படத்தில் வெளியிட்டுள்ள உங்களது விருப்பப்படி, இவர்களையெல்லாம் அன்றே விடுவித்து ‘கொலை’ செய்திருந்தால்? அவர்களது குடும்பமும், குழந்தைகளும் என்ன நிலைக்கு ஆளாகியிருப்பார்கள்? அவர்கள் எந்த முடிவை கையிலெடுத்திருப்பார்கள் என்றெல்லாம் நீங்கள் சிந்தித்திருக்கவில்லையா?

பாபர் மசூதி இந்து மதவெறியர்களால் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கலவரங்களிலும், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கலவரங்களிலும், ஒரிசா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்களிலும் முழுவதுமாக பாதிக்கப்பட்டதும், உயிர்ச்சேதம், பொருட்சேதம் உள்ளிட்ட சேதங்களை சந்தித்தது, சிறுபான்மையின மக்கள் தாம். அம்மக்களுள், பாதிக்கப்பட்ட, உணர்ச்சி வயப்பட்ட இளைஞர்கள் சிலர் செய்யும் காரியங்களை மட்டுமே ‘பயங்கரவாதம்’ என்று சித்தரிக்கும் நீங்கள், இந்தக் கலவரங்களில் ஈடுபட்டு இசுலாமியர்களையும், கிறிஸ்துவர்களையும் தாக்கிக் கொன்றழித்து, அவர்களது வாழ்விடங்களை சேதப்படுத்திய இந்து மதவெறியர்களை வெளிப்படையாக இப்படத்தில் கண்டிக்கவில்லை. இதன்வழி, இப்படம் இந்துத் தீவிரவாத உணர்வுகளைப் பரப்புகிறது என்பது எங்கள் குற்றச்சாட்டு.

2006 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலம் மலேகான் நகரில் இசுலாமியர் வாழ்ப் பகுதியில் குண்டு வெடித்து 37 பேர் இறந்தனர். இதற்குக் காரணம் என்ற சொல்லி அப்பொழுது, பல இசுலாமியர்கள் கைது செய்யப்பட்டு பல இசுலாமிய இயக்கங்கள் மீது பயங்கரவாத பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அதற்குப் பின்னர், செப்டம்பர் 29 அன்று திரும்பவும் நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 30 பேருக்கு மேல் காயமடைந்தனர். அதே நேரத்தில், குஜராத் மாநிலத்தில் மொடாசா என்ற ஊரிலும் குண்டு வெடித்தது. அதில் 16 வயது சிறுவன் கொல்லப்பட்டான். 10 பேர் காயமடைந்தனர். இவ்விரண்டு சம்பவங்களுக்கும் காரணம் சாத்வி பு+ர்ண கிரி என்ற இந்துமதவெறி சாமியார் தான் என்று அறிவித்தது காவல்துறை.

2007 சனவரி 24ஆம் தேதி, தமிழ்நாட்டில் தென்காசி நகரில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. 2 பேர் காயமடைந்தனர். இதற்குக் காரணம் இசுலாமியர்கள் தான் என்று பா.ச.க. இல.கணேசன், இந்து முன்னணி இராம.கோபாலன் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். இறுதியில், இதற்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தான் என்று காவல்துறை கண்டுபிடித்தது. “இந்துக்களிடம் எழுச்சி வர வேண்டும்” என்பதற்காக அப்படி செய்ததாகவும் அந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொன்னார்கள்.

2007 ஏப்ரல் 6 அன்று மராட்டிய மாநிலம் நாண்டட் நகரில் அதிகாலைப் பொழுதில், ஓய்வு பெற்ற நீர்பாசனத்துறைப் பொறியாளர் லக்‘;மணன் என்பவர் வீட்டில் வெடிகுண்டு வெடித்தது. 3 பேர் மாண்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். காயமடைந்தவர்களை இந்து மதவெறித் தலைவர்களான விசுவ இந்து பரிசித்

உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் போய் பார்த்து “ஆறுதல்” கூறினர். விசாரித்ததில், மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் நகரின் மசூதி ஒன்றில் குண்டு வைக்கவே அவர்கள் வெடிகுண்டுகள் தயார் செய்திருந்தது அம்பலமானது.

2008 ஆகஸ்ட மாதம் கான்பு+ரில் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போது, ராஜீவ் மிஸ்ரா, பு+பேந்திர சோப்ரா என்ற 2 ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் இறந்த சம்பவம் நடந்தது.

இவை அனைத்தும் இந்துத் தீவிரவாத அமைப்புகள் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள். உன்னைப் போல் ஒருவன் திரைப் படத்தில் நீங்கள் நடித்த கதாபாத்திரம் பல குண்டுவெடிப்புகளைச் சுட்டிக் காட்டிப் பேசுகிறது. அவை அனைத்துமே இஸ்லாமியர் செய்ததாகக் கூறப்படும் சம்பவங்கள்தான். மேலும் 1982 மீனம்பாக்கம், 1991 பெரும்புதூர் குண்டு வெடிப்புகளையும் மேற்கோள் காட்டிப் பேசியுள்ளது அக் கதாபாத்திரம்.

ஒருவேளை நாட்டில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் விமர்சிப்பது உங்கள் நோக்கம் என்றால், இந்துத் தீவிரவாத அமைப்புகள் ஈடுபட்ட பயங்கரவாதச் செயல்களை நீங்கள் உள்நோக்கத்தோடு தான் தவிர்த்திருக்கிறீர்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவர்களுக்கு ஆப்கான் தலிபான்களுடன் தொடர்பு உள்ளது என்று உங்கள் திரைப்படம் கூறுகிறது. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் நீதி மன்றம் அளித்த தீர்ப்புகளில் கூட இந்தக் குற்றச் சாட்டு கூறப்படவில்லை. ஆகவே, நீதிமன்றம், விசாரணை ஆகியவற்றைத் தாங்கள் அவமதித்திருக்கிறீர்கள்.

சிறையில் இருக்கும் கைதிகளை வெளியில் கொண்டு வந்து கொல்ல வேண்டும் என்ற கருத்தை நீங்கள் இத்திரைப்படத்தில் நியாயப்படுத்தியிருக்கிறீகள். இதன் விளைவாக, கோவை குண்டு வெடிப்பில் கைதாகிச் சிறையில் இருக்கும் இஸ்லாமியத் தோழர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் வாடுகின்றனர்.

இவர்களது அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் தாங்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டுகிறோம்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு தாங்கள் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் பதலளிக்க வேண்டும். மேலும், இந்து மதவெறியை ஆதரிக்கும் காட்சிகளையும் வசனங்களையும் உடனடியாக நீக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம்.

தோழமையுடன்,
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.

0 கருத்துகள்: