ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடு முற்றுகை : உணர்வாளர்களே ஈரோட்டில் திரள்க!
Friday, May 8, 2009
ஈரோடு, 8.5.09.
தந்தை பெரியாரின் உண்மையான பேரன் நான் தாம் என்றும் சீமான், பெரியார் சிறு வயதில் செய்த தவறுகளால் பிறந்திருக்கலாம் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசிய திமிர்த்தனமான பேச்சு உலகெங்கும் வாழும் தமிழர்கள் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் 48 மணி நேரத்தில் இப்பேச்சுக்காக இளங்கோவன் மன்னி்ப்புக் கேட்க வேண்டும் என்று இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு விடுத்திருந்தது.
இக்கெடு இன்றிரவுடன் முடிவடைவதால், நாளை காலை 10 மணியளவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த இளந்தமிழர் இயக்கம் அறிவிக்கிறது.
நாளை நடைபெறவிருக்கும் இப்போராட்டத்தில் உணர்வாளர்களும், ஊடக நண்பர்களும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு அனைவரயும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
(குறிப்பு : ஈரோடு போராட்டத்தில் கலந்து கொள்ள விழையும் அன்பர்கள் 9626130176 என்ற கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்.)
0 கருத்துகள்:
Post a Comment