Re: தமிழீழ ஆதரவுப் பரப்புரைப் பயணத் திட்டம்
Friday, February 27, 2009
வணக்கம் தோழர்களே..
தமிழீழ ஆதரவுப் பரப்புரைப் பயணம் மிகச்சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. பல கிராமங்களில் மக்களுக்கு உண்மை நிலை என்னவென்று தெரியாத நிலையில் உள்ளனர் என்பதனை காண முடிந்தது.
சில கிராமங்களில் ஈழத்தமிழர் அவலங்கள் குறித்து படங்கள் காட்டும் பொழுது பலர் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினர்.
காங்கிரசின் துரோகத் தனத்திற்கான ஆதரங்களை புகைப்படக் கண்காட்சிகளாக வைத்த போது பலரும் ஆர்வத்துடன் கண்டு குறிப்புகளும் எடுத்துக் கொண்டனர். தங்கள் தொகுதிக்கு ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவோம் என்று சில கிராமத்தில் மக்கள் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
தற்பொழுது பயணத்திற்கான ஏற்பாடுகள், மாநாட்டுக்கான வேலைகள், மாநாடு குறித்த செய்தி பரப்புரை, செய்தித் தொடர்பு என பல வேலைகளில் சிக்குண்டு இருப்பதால் பயணம் குறித்த செய்திகளை இணையதளங்களில் உடனுக்குடன் பதிவேற்ற முடியவில்லை. இயலாமைக்கு மிக்க வருந்துவதுடன் இதனை சரிசெய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
ம.செந்தமிழன் தலைமையிலான முதல் அணியினர் சீகுகாழியை நோக்கி தற்பொழுது சென்று கொண்டிருக்கின்றனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சேசுபாலன்ராஜா தலைமையிலான இரண்டாம் அணியினர் ராமேஸ்வரம் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
முற்றிலும் தொடர்புகள் இல்லாத பல புதிய ஊர்களுக்கு சென்று பரப்புரை செய்வதால் ஏற்படும் பிரச்சினைகள், தங்குவது, உணவு ஏற்பாடு, வாகனப் பராமரிப்பு என பல்வேறு சிற்சில சிக்கல்களையெல்லாம் கடந்து பயணம் வெற்றி நடை போடுகிறது. இதற்கு உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் எமக்களித்த ஊக்கமே காரணம்.
"காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" கையெழுத்து இயக்கப் படிவங்களை இளந்தமிழர் இயக்கத்தின் வலைதளத்தில் ( http://elanthamizhar.blogspot.com) தரவிறக்கம் செய்து கொண்டு வருகிற 4 ஆம் தேதிக்குள் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விடுங்கள். அவற்றை சமர்ப்பிதற்கான "இன எழுச்சி மாநாட்டி"ற்கு பல தேவைகள் உள்ளன. அவற்றை நிறைவு செய்திட உதவிகள் புரிய விரும்பும் தோழர்கள் எம்மை தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.
நன்றி..!
தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்
இளந்தமிழர் இயக்கம்
பேச 9841949462
ஒருங்கிணைப்பாளர்
இளந்தமிழர் இயக்கம்
பேச 9841949462
0 கருத்துகள்:
Post a Comment