இளந்தமிழர் இயக்கம்
Friday, February 20, 2009
ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போர் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவின் உதவியுடன் நடக்கும் இப்போர் நடத்தப்படுவதால் சிங்கள இனவெறி அரசின் அதிபர் அரசு ஐ.நா. சபையே தலையிட்டாலும் ”போர் நிறுத்தம் முடியாது” என கொக்கரிக்கிறார்.
இந்திய அடிமையாய் கிடப்பதால் ஈழத்தமிழர்களைக் காக்க தன்னால் ஏதும் செய்ய இயலவில்லையே என்ற ஏக்கமும், தேர்தல் கட்சிகளின் சுயநல ஓட்டு அரசியல் பிழைப்புவாதங்களும் தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை தற்கொலைக்குத் தூண்டியிருக்கிறது. ஈகி முத்துக்குமார் மூட்டியத் தீயின் வீரியம் மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் உன தமிழகத்தை தன்னியல்பாக எழ வைத்திருக்கிறது.
இந்த எழுச்சி தமிழினத் துரோகிகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. அவர்களது இருப்பை தகர்ப்பதன் மூலமே தமிழினத்தின் விடியலுக்கு நம்மால் ஒளி ஏற்ற முடியும். ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்த ஈகிகளுக்கு இதுவே நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.
தோ்தல் புறக்கணிப்பு, தமிழீழ விடுதலை, தமிழகத் தமிழர்களின் உரிமைப் பாதுகாப்பு என்கிற மூன்று அடிப்படை கொள்கைகளில் உடன்பாடுள்ள மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், மருத்துவர்கள், திரைத் துறையினர் என கட்சி வேறுபாடுகள் கடந்து, தமிழ் உணர்வாளர்களை உள்ளடக்கி தமிழகம் தழுவிய அளவில் மாற்று அரசியலுக்கான வெளியை ஏற்படுத்துவதே நோக்கம் என இளந்தமிழர் இயக்கம் பிறப்பெடுக்கிறது.
இந்நோக்கங்களைக் கொண்டுள்ள உணர்வாளர்கள் தங்களது பங்களிப்பை செய்து இவ்வியக்கத்தை மக்கள் இயக்கமாக கட்டியெழுப்ப வேண்டும். விரைவில் இவ்வியக்கம் சார்பாக தமிழகம் முழுவதிலுமுள்ள காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் ”தமிழீழ ஆதரவு வாகனப் பிரச்சார”மும், ”துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” என்று 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் கையெழுத்து இயக்கமும் நடத்திட திட்டமிடப்பட்டு இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் தேதி அறிவிக்கப்படும்.
தமிழின துரோகக் காங்கிரசை துரத்தியடிப்போம் வாருங்கள்!
இன உணவுணர்வுள்ள தமிழர்களே! அணி திரள்வீர்!
இயன்ற பங்களிப்பை செய்திடுவீர்!
தொடர்புக்கு...
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்
பேச : +91 - 9841949462
மின்னஞ்சல் : arunabharthi@gmail.com
கோ.ராஜாராம்
நிர்வாகக் குழு
பேச : +91 - 9894310997
மின்னஞ்சல் : elanthamizhar@gmail.com
0 கருத்துகள்:
Post a Comment