இளந்தமிழர் இயக்கம் நடத்தும் இன எழுச்சி மாநாடு(06-03-09)

Saturday, February 28, 2009

மாற்று அரசியலைக் கட்டியெழுப்புக
- மாவீரன் முத்துக்குமார்
--------------------------------------------------------------------------------------------------------------------------------

இளந்தமிழர் இயக்கம் நடத்தும்
இன எழுச்சி மாநாடு
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 
தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயண நிறைவு விழா
"காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" 1 லட்சம் கையெழுத்துகள் முன்வைப்பு

நாள் 05 மார்ச் 2009, மாலை 5.00 மணி
இடம் சேலம் போஸ் மைதானம்

பங்கேற்பாளர்கள்
தோழர் பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

தோழர் த.செ.கொளத்தூர் மணி,
தலைவர்,
பெரியார் திராவிடர் கழகம்

தோழர் தியாகு
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

திரு சிவாஜிலிங்கம்,
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இயக்குநர் மணிவண்ணன்

ஓவியர் புகழேந்தி

எழுத்தாளர் தூரன் நம்பி

க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்

இன உணர்வாளர்களே ! அணி திரள்வீர் !

--------------------------------------------------------------------------------------------------------------------------------
பேச :  9629130176, 9841949462
வலைப்பதிவு :
http://elanthamizhar.blogspot.com
மின்னஞ்சல் : elanthamizhar@gmail.com

Read more...

இளந்தமிழர் இயக்கம் நடத்தும் "இன எழுச்சி மாநாடு" (06-03-09)

மாற்று அரசியலைக் கட்டியெழுப்புக
- மாவீரன் முத்துக்குமார்

--------------------------------------------------------------------------------------------------------------------------------
இளந்தமிழர் இயக்கம் நடத்தும்
இன எழுச்சி மாநாடு
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 
தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயண நிறைவு விழா
"காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" 1 லட்சம் கையெழுத்துகள் முன்வைப்பு

நாள் 05 மார்ச் 2009, மாலை 5.00 மணி
இடம் சேலம் போஸ் மைதானம்

பங்கேற்பாளர்கள்
தோழர் பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

தோழர் த.செ.கொளத்தூர் மணி,
தலைவர்,
பெரியார் திராவிடர் கழகம்

தோழர் தியாகு
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

திரு சிவாஜிலிங்கம்,
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இயக்குநர் மணிவண்ணன்

ஓவியர் புகழேந்தி

எழுத்தாளர் தூரன் நம்பி

க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்

இன உணர்வாளர்களே ! அணி திரள்வீர் !

--------------------------------------------------------------------------------------------------------------------------------
பேச :  9629130176, 9841949462
வலைப்பதிவு :
http://elanthamizhar.blogspot.com
மின்னஞ்சல் : elanthamizhar@gmail.com
 

Read more...

Re: தமிழீழ ஆதரவுப் பரப்புரைப் பயணத் திட்டம்

Friday, February 27, 2009

வணக்கம் தோழர்களே..
 
தமிழீழ ஆதரவுப் பரப்புரைப் பயணம் மிகச்சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. பல கிராமங்களில் மக்களுக்கு உண்மை நிலை என்னவென்று தெரியாத நிலையில் உள்ளனர் என்பதனை காண முடிந்தது.
 
சில கிராமங்களில் ஈழத்தமிழர் அவலங்கள் குறித்து படங்கள் காட்டும் பொழுது பலர் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினர்.
காங்கிரசின் துரோகத் தனத்திற்கான ஆதரங்களை புகைப்படக் கண்காட்சிகளாக வைத்த போது பலரும் ஆர்வத்துடன் கண்டு குறிப்புகளும் எடுத்துக் கொண்டனர். தங்கள் தொகுதிக்கு ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவோம் என்று சில கிராமத்தில் மக்கள் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
 
தற்பொழுது பயணத்திற்கான ஏற்பாடுகள், மாநாட்டுக்கான வேலைகள், மாநாடு குறித்த செய்தி பரப்புரை, செய்தித் தொடர்பு என பல வேலைகளில் சிக்குண்டு இருப்பதால் பயணம் குறித்த செய்திகளை இணையதளங்களில் உடனுக்குடன் பதிவேற்ற முடியவில்லை. இயலாமைக்கு மிக்க வருந்துவதுடன் இதனை சரிசெய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
 
ம.செந்தமிழன் தலைமையிலான முதல் அணியினர் சீகுகாழியை நோக்கி தற்பொழுது சென்று கொண்டிருக்கின்றனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சேசுபாலன்ராஜா தலைமையிலான இரண்டாம்  அணியினர் ராமேஸ்வரம் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். 
 
முற்றிலும் தொடர்புகள் இல்லாத பல புதிய ஊர்களுக்கு சென்று பரப்புரை செய்வதால் ஏற்படும் பிரச்சினைகள், தங்குவது, உணவு ஏற்பாடு, வாகனப் பராமரிப்பு என பல்வேறு சிற்சில சிக்கல்களையெல்லாம் கடந்து பயணம் வெற்றி நடை போடுகிறது. இதற்கு உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் எமக்களித்த ஊக்கமே காரணம்.
 
"காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" கையெழுத்து இயக்கப் படிவங்களை இளந்தமிழர் இயக்கத்தின் வலைதளத்தில் ( http://elanthamizhar.blogspot.com) தரவிறக்கம் செய்து கொண்டு வருகிற 4 ஆம் தேதிக்குள் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விடுங்கள். அவற்றை சமர்ப்பிதற்கான "இன எழுச்சி மாநாட்டி"ற்கு பல தேவைகள் உள்ளன. அவற்றை நிறைவு செய்திட உதவிகள் புரிய விரும்பும் தோழர்கள் எம்மை தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.
 
நன்றி..!
 
தோழமையுடன்,
க.அருணபாரதி

ஒருங்கிணைப்பாளர்
இளந்தமிழர் இயக்கம்
பேச 9841949462

Read more...

இளந்தமிழர் இயக்கத்தின் தமிழீழ ஆதரவு பயணம் தொடங்கியது

Wednesday, February 25, 2009

இளந்தமிழர் இயக்கம் நடத்தும்
தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் 
"காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" கையெழுத்து இயக்கம்
தஞ்சையில் கோலாகலத் தொடக்கம்
 
தஞ்சை - 26-02-09.
 
தமிழீழ மக்கள் படும் இன்னல்களை மக்களுக்கு விளக்கவும், அதற்குக் காரணமான சிங்கள இனவெறி அரசிற்கு துணை போகும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசைக் கண்டித்தும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் "தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்" நேற்று(25-02-09) தொடங்கியது.
 
தஞ்சை சாந்தி கமலா திரையருங்கு அருகில் நடந்த தொடக்க விழாவில், திரை இயக்குநர் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி,  எழுத்தாளர் தூரன் நம்பி, தஞ்சை வழக்கறிஞர் சங்க செயலாளர் வழக்கறிஞர் நல்லதுரை உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 
முன்னதாக, "இளந்தமிழர் இயக்கம்" தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்தும் ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயர்நீத்த மாவீரன் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட மாணவர் எழுச்சியை பற்றியும் விளக்க இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி பேசினார்.
 
"இனத் துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" என்று 1 இலட்சம் பேரிடம் கையெழுத்துகள் சேகரிக்கும் கையெழுத்தியக்கம் குறித்தும் காங்கிரசின் இனத் துரோக நடவடிக்கைகள் குறித்தும் இளந்தமிழ இயக்கத்தின் பயணத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ம.செந்தமிழன் பேசினார். மேலும், தோ்தல் அரசியல் சாராத மாணவர்கள் இளைஞர்களை தமிழ் உணர்வை மட்டும் கொண்டு ஒன்றிணைக்கும் இவ்வியக்கத்தை மாணவர்களிடமும் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து மாற்று அரசியலுக்கான பாதையை ஏற்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.
 
பின்னர் வழக்கறிஞர் நல்லதுலை, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, மணிவண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்துரை வழங்கினர். "காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" கையெழுத்து இயக்கத்திற்கு முதல் கையெழுத்தை இயக்குநர் மணிவண்ணன் போட பின்னர் பலரும் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.
 
புதுக்கோட்டை நோக்கி ஒரு அணியும், வேதாரண்யம் நோக்கி ஒரு அணியும் என பரப்புரைப் பயணக்குழுவினர் இரண்டு அணிகளாக பிரிந்து தஞ்சையிலிருந்து கிளம்பி சென்றனர். வழிநெடுகில் பல்வேறு கிராம மக்களிடம் பரப்புரையின் நோக்கம் குறித்தும் தமிழீழ மக்களின் இன்னல்கள் குறித்தும் குழுவினர் விளக்கி வருகின்றனர். "காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" கையெழுத்து இயக்கப் படிவத்தில் மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு வருகின்றனர்.
 
வட தமிழ்நாடு நோக்கி செல்லும் அணிக்கு ம.செந்தமிழனும், தென் தமிழ்நாடு நோக்கி செல்லும் அணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சேசுபாலன்ராஜாவும் வழிநடத்திச் செல்கின்றனர். இப்பயணக்குழுவினர் வருகிற மார்ச் 6 ஆம் திகதி சேலத்தில் நடக்கும் "இன எழுச்சி மாநாட்டில்" சந்திக்கின்றனர்.
 
தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்
இளந்தமிழர் இயக்கம்
பேச  : 9841949462

Read more...

கையெழுத்து இயக்கம் படிவம் வெளியீடு

Tuesday, February 24, 2009

"இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்"
கையெழுத்து இயக்கப் படிவம்
இளந்தமிழர் இயக்கம் வெளியீடு
தஞ்சை, 24-02-2009.
"மாற்று அரசியலைக் கட்டியெழுப்புவோம்" என்ற மாவீரன் முத்துக்குமாரின் கட்டளையை நிறைவேற்றும் முகமாக மாணவர்கள். இளைஞர்கள். வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து உருவாக்கியிருக்கும் "இளந்தமிழர் இயக்கம்", தமிழ் உணர்வுள்ள நல் நெஞ்சங்களின் ஆதரவோடு இன்று(25-2-09) தமது முதல் செயல் திட்டமான "தமிழீழ அதரவு பரப்புரைப் பயணத்தை" தொடங்கவிருக்கிறது.
அத்துடன் "இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" என்று 1 இலட்சம் கையெழுத்துகள் பெற்றிடும் கையெழுத்து இயக்கமும் தொடங்கப்படுகின்றது. (அதற்கான படிவம் மடலுடன் இணைக்கப்பட்டுள்ளது.) பயணத்திற்கும் இக் கையெழுத்து இயக்கத்திற்கும் ஆதரவு தெரிவித்து நாடுகள் கடந்து வாழ்த்து தெரிவித்த உள்ளங்களுக்கெல்லாம் நன்றி தெரிவிக்கும் வேளையில் எமது கடமைகளையும் பொறுப்புகளையும் நாம் உணர்ந்திருக்கிறோம். அதனை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும் உறுதி கூறுகிறொம்.
"தமிழீழ ஆதரவு பரப்பரைப் பயண"த்திற்க்கு உதவிட விரும்பும் ஆர்வலர்களும், ஆங்காங்கே வரவேற்புகள் கொடுக்க விரும்பும் ஆதரவாளர்கள் கைபேசியிலும், தனி மடலிலும் தொடர்பு கொள்ளவும்.
மேலும் இவ்வியக்கத்தில் இணைந்திட விரும்பும் நேசமிகு உறவுகளையும் அன்புடன் வரவேற்கிறோம். தமிழீழ ஆதரவு, தமிழர் உரிமைப் பாதுகாப்பு என்ற இரு நோக்கங்களை மட்டும் முதன்மை படுத்தி தேர்தல் அரசியலை புறந்தள்ளிவிட்ட தன்னலம் கருதாது இனநலம் மட்டுமே கருத்தில் கொள்ளும் மாணவர்கள், இளைஞர்கள். வழக்கறிஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், மருத்தவர்கள் என அனைவரும் இவ்வியக்கத்தில் சேர்ந்து இவ்வியக்கத்தை மக்கள் இயக்கமாக கட்டமைக்கும் அரும்பணியைச் செய்யலாம்.
குறிப்பு : இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் அவரவர் தமது சக்திக்கேற்ப நகலெடுத்து (முதல் பக்கம் மட்டும் நகலெடுத்துவிட்டு அடுத்த பக்கங்கள் எண்களை வரிசையாக போட்டுக் கொள்ளவும்) பரப்புரை மேற்கொண்டு எத்தனை கையெழுத்துகள் சேகரித்த "இன எழுச்சி மாநாடு" நடைபெறும் நாளுக்கு முந்தைய தினமான 5-மார்ச்- 2009 அன்று மாலைக்குள் எம்மை வந்தடையமாறு செய்யுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்
பேச : 9841949462
கே.ராஜாராம்
நிர்வாகக் குழு
பேச : 9894310997
கையெழுத்து படிவங்கள் வந்து சேர வேண்டிய முகவரி :
இளந்தமிழர் இயக்கம்,
44-1, பஜனைக் கோவில் தெரு,
முத்துரங்கன் சாலை,
தியாகராயர் நகர்,
சென்னை-17.

Read more...

தமிழீழ ஆதரவு பரப்புரை பயணம்

Sunday, February 22, 2009

மாவீரன் முத்துக்குமாரின் கட்டளைகளை நிறைவேற்றுவோம்...!
  • தமிழீழத்தின் மீது இலங்கை - இந்திய கூட்டுப் படைகள் நடத்தும் வெறியாட்டத்தை அம்பலப்படுத்தவும்

  • தமிழீழத்தை தனித் தேசிய இனமாக அங்கீகரிக்கக் கோரியும்
தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்

பிப்ரவரி 25(புதன் கிழமை)
தஞ்சையில் தொடங்கி 10 நாட்கள் - நாகை, திருவண்ணாமலை, சிதம்பரம், கடலூர், இராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, ஓசூர், மதுரை, திண்டிவனம், மேட்டூர் என தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்குச் சென்று தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பயணம்!

வீதி நாடகங்கள்...
புகைப்படக் காட்சி...
ஆவணப்படங்கள்...

“இனவிரோத காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்“
என்று 1 லட்சம் பேரிடம் கையெழுத்து!

மார்ச் 6(வெள்ளிக்கிழமை)
சேலத்தில்
”இன எழுச்சி மாநாடு”
இன உணர்வாளர்களே! இயன்ற பங்களிப்பை செய்வீர்!

இளந்தமிழர் இயக்கம்

தொடர்புக்கு :
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
பேச - 9841949462

கோ.ராஜாராம்,
நிர்வாகக் குழு,
பேச - 9894310997

Read more...

இளந்தமிழர் இயக்கம்

Friday, February 20, 2009

ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போர் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவின் உதவியுடன் நடக்கும் இப்போர் நடத்தப்படுவதால் சிங்கள இனவெறி அரசின் அதிபர் அரசு ஐ.நா. சபையே தலையிட்டாலும் ”போர் நிறுத்தம் முடியாது” என கொக்கரிக்கிறார்.

இந்திய அடிமையாய் கிடப்பதால் ஈழத்தமிழர்களைக் காக்க தன்னால் ஏதும் செய்ய இயலவில்லையே என்ற ஏக்கமும், தேர்தல் கட்சிகளின் சுயநல ஓட்டு அரசியல் பிழைப்புவாதங்களும் தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை தற்கொலைக்குத் தூண்டியிருக்கிறது. ஈகி முத்துக்குமார் மூட்டியத் தீயின் வீரியம் மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் உன தமிழகத்தை தன்னியல்பாக எழ வைத்திருக்கிறது.

இந்த எழுச்சி தமிழினத் துரோகிகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. அவர்களது இருப்பை தகர்ப்பதன் மூலமே தமிழினத்தின் விடியலுக்கு நம்மால் ஒளி ஏற்ற முடியும். ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்த ஈகிகளுக்கு இதுவே நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.
தோ்தல் புறக்கணிப்பு, தமிழீழ விடுதலை, தமிழகத் தமிழர்களின் உரிமைப் பாதுகாப்பு என்கிற மூன்று அடிப்படை கொள்கைகளில் உடன்பாடுள்ள மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், மருத்துவர்கள், திரைத் துறையினர் என கட்சி வேறுபாடுகள் கடந்து, தமிழ் உணர்வாளர்களை உள்ளடக்கி தமிழகம் தழுவிய அளவில் மாற்று அரசியலுக்கான வெளியை ஏற்படுத்துவதே நோக்கம் என இளந்தமிழர் இயக்கம் பிறப்பெடுக்கிறது.
இந்நோக்கங்களைக் கொண்டுள்ள உணர்வாளர்கள் தங்களது பங்களிப்பை செய்து இவ்வியக்கத்தை மக்கள் இயக்கமாக கட்டியெழுப்ப வேண்டும். விரைவில் இவ்வியக்கம் சார்பாக தமிழகம் முழுவதிலுமுள்ள காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் ”தமிழீழ ஆதரவு வாகனப் பிரச்சார”மும், ”துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” என்று 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் கையெழுத்து இயக்கமும் நடத்திட திட்டமிடப்பட்டு இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் தேதி அறிவிக்கப்படும்.
தமிழின துரோகக் காங்கிரசை துரத்தியடிப்போம் வாருங்கள்!
இன உணவுணர்வுள்ள தமிழர்களே! அணி திரள்வீர்!
இயன்ற பங்களிப்பை செய்திடுவீர்!
தொடர்புக்கு...
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்
பேச : +91 - 9841949462
மின்னஞ்சல் : arunabharthi@gmail.com
கோ.ராஜாராம்
நிர்வாகக் குழு
பேச : +91 - 9894310997
மின்னஞ்சல் : elanthamizhar@gmail.com

Read more...